»   »  நடிப்பா? படிப்பா?-பானு குழப்பம்!

நடிப்பா? படிப்பா?-பானு குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து நடிப்பதா அல்லது படிப்பை உருப்படியாக கவனிப்பதா என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் தாமிரபரணி பானு.

நயனதாரா நடிக்க மறுத்து விட்டதால் கடுப்பான இயக்குநர் ஹரி, தனது தாமிரபரணி படத்தில் நயனதாராவைப் போன்ற சாயலில் இருந்த பானுவை நாயகியாக்கினார்.

பரவாயில்லை என்ற அளவுக்கு இப்படத்தில் தேறினார் பானு. ஆனால் அதன் பின்னர் தன்னைத் தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் பெரும் தவிப்பில் சிக்கினார் பானு. காரணம் என்ன தெரியுமோ?

படிப்புதான். பானு, கேரளாவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்புதான் படித்து வருகிறாராம். அதிலும் தாமிரபரணி ஷூட்டிங்குக்காக அடிக்கடி மட்டம் போட்டதால் சரியாகப் படிக்க முடியாமல் போய் விட்டதாம்.

இதனால் பள்ளித் தேர்வுகளை சரியாக எழுத முடியாமல், பாடங்களை ஒழுங்காக படிக்க முடியாமல் வாத்தியார்களிடம் திட்டு வாங்க நேரிட்டு விட்டதாம். இப்போது முழுப் பரீட்சை வேறு வந்து விட்டதாம்.

பரீட்சையை சரியாக எழுத முடியுமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் பானு. இதனால் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், சார், பரீட்சை இருக்கிறது, முடித்து விட்டு வருகிறேன், வெயிட் பண்ணுங்க என்று கெஞ்சி அனுப்பி விடுகிறாராம்.

பானு முதலில் 10வது வகுப்பு படித்துக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பத்தாவது வகுப்புக்கு முன்னேற முடியுமா என்ற பெரும் கவலையில் உள்ளாராம் பானு.

படிப்பு மீது பானுவுக்கு தீராத காதலாம். ஆனால் அவரது பெற்றோருக்கோ, பானுவைத் தேடி வரும் கரன்சிகள் மீதுதான் தனியாத தாகம் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் பானுவிடம், படித்தது போதும், வருகிற வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு பொட்டியை நிரப்புகிற வழியைப் பார் என்று அனத்தி வருகிறார்களாம்.

படிப்பா, நடிப்பா என்ற பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாராம் பானு. 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

நாயகன் சரண்யாவிடம் யோசனை கேட்டால் கரெக்டாக சொல்வாரே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil