»   »  கன்னடத்துக்குப் பாயும் பானு!

கன்னடத்துக்குப் பாயும் பானு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாமிரபரணி மூலம் தமிழுக்கு வந்த பானு, இப்போது கன்னடத்துக்குப் பாய்ந்துள்ளார்.

மலையாளம் தந்த வளமான நாயகிகளில் பானுவும் ஒருவர். இப்போது நடித்துக் கொண்டிருக்கிற மலையாள நடிகைகளிலேயே மிகவும் சின்ன வயதுக்காரர் பானுதான். இப்போதுதான் பத்தாவது வகுப்புக்கே அவர் போகிறாராம்.

தாமிரபரணியில், அவரது நடிப்பும், துடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் அப்படத்துக்குப் பின்னர் பானுவைக் காணவில்லை.

இதற்கு படிப்பை ஒரு காரணமாக காட்டியது பானு தரப்பு. ஆனால் அவர் கேட்ட குண்டக்க மண்டக்க சம்பளம்தான் வாய்ப்புகள் அடுத்தடுத்து வராமல் போனதற்கு முக்கியக் காரணம் என தயாரிப்பாளர்கள் தரப்பில் புலம்பப்படுகிறது.

தமிழில் வந்த வாய்ப்புகளை தட்டி விட்டு வந்த பானு இப்போது மலையாளத்திலும், தெலுங்கிலும் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். தமிழை ஏன் இப்படி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என்று பானுவிடம் கேட்டபோது, தாமிரபரணிக்குப் பிறகு எனக்கு 8 படங்கள் வந்தன.

ஆனால் எந்தக் கதையும் என்னைக் கவருவதாக இல்லை. தமிழில் நல்ல வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்கிறேன். இப்போது கன்னடத்தில் ஒரு படம் கிடைத்துள்ளது. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறர்.

ராஜசேனன் இயக்குகிறார். மலையாளத்தில் வெளியான இம்மினி நல்லோரல் என்ற படத்தின் ரீமேக்தான் இப்படம்.

மலையாளத்தில் நவ்யா நாயர் நடித்த ரோலில் கன்னடத்தில் நான் நடிக்கிறேன் என்றார் பானு.

நயனதாரா மாதிரி இருக்கிறார் என்று எல்லோரும் சொன்ன நேரமோ என்னவோ, பானுவுக்கும் தமிழ் ஒட்டாமல் போய் விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil