»   »  பிரேக் பானு

பிரேக் பானு

Subscribe to Oneindia Tamil

தாமிரபரணி மூலம் கிடைத்த அழகான அடித்தளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழில் பல பட வாய்புகளை இழந்து, படிக்கப் போன பானு, இப்போது நடிப்புக்கு பிரேக் கொடுத்து விட்டு மறுபடியும் படிக்கப் போகிறாராம்.

மலையாளத்து வாச மல்லிகை பானு. பெரிய பொண்ணுங்களுக்கேற்ற உடல் வாகுடன் அழகு ரோஜாவாக இருந்த பானு, படித்ததென்னவோ பத்தாப்புதான்.

ஆனால் தனது மத்தாப்பூ சிரிப்பால் தமிழ் ரசிகர்களை தாமிரபரணி நதியாக தொட்டுச் சிலிர்க்க வைத்த பானுவைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால், அவற்றை வேண்டாம் என நிராகரித்து விட்டார் பானு. என்ன காரணம் என்று விசாரித்தால், பத்தாவது வகுப்பு பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்ததால்தான் நடிப்புக்கு பிரேக் கொடுத்தார் பானு என்று தெரிய வந்தது.

இப்போது பத்தாவது வகுப்பை பாஸ் செய்து விட்டாராம் பானு.இடையில் கிடைத்த விடுமுறையில் மலையாளத்தில் கோல் என்ற படத்தில் மட்டும் நடித்தார் பானு.

சரி படிப்புதான் முடிந்து விட்டதே, இனிமேல் நடிக்கலாமே என்று பானுவிடம் சிலர் ஓலை அனுப்பினார்களாம். ஆனால் மறுபடியும் நடிப்புக்கு பிரேக் கொடுத்து விட்டாராம் பானு.

அதாவது பிளஸ் ஒன் படிக்கப் போகிறாராம். அதனால் மறுபடியும் சில காலத்திற்கு நடிக்க மாட்டாராம். இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்ட கங்காரு என்ற மலையாளப் படத்தில் மட்டும் நடிப்பாராம் பானு.

இப்படத்தில் ஜெயசூர்யா, பிருத்விராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ராஜ்பாபு இயக்குகிறார். இந்தப் படத்திற்குப் பின்னர் வேறு படங்களில் பானு புக் ஆகவில்லையாம்.

இதுதவிர தெலுங்கிலும் ஒரு படம் உள்ளதாம். அதையும் முடித்து விட்டு நடிப்பை சஸ்பெண்ட் செய்து விட்டு சவுண்டாக படிக்கப் போகிறாராம்.

சேச்சிமாரெல்லாம் ரொம்ப வெவரமாக்கும்!

Please Wait while comments are loading...