»   »  பானுவின் 'மூன்று'

பானுவின் 'மூன்று'

Subscribe to Oneindia Tamil
Bhanu
பானுவின் 'மூன்று': தாமிரபரணியோடு தாயகமான கேரளாவுக்கே திரும்பிப் போய் விட்ட பானு, மீண்டும் திரும்பி வருகிறார் - மூன்று படம் மூலம்.

ஹரி இயக்கத்தில் வெளியான தாரமிபரணியில் முதலில் நயனதாராதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால், கேரளாவிலிருந்து பானுவைக் கூட்டி வந்து நடிக்க வைத்தார் ஹரி.

ஹரியின் அறிமுகமான நயனதாரா மிகப் பெரிய ரேஞ்சுக்கு உயர்ந்தது போல பானும் பலே உயரத்தை எட்டுவார் என கூறப்பட்டது. ஆனால் பானுவோ, முதல் படத்தோடு ஊருக்குப் போய் விட்டார்.

இப்போதைக்கு நடிப்புக்கு டாட்டா, படிக்கப் போகிறேன் என்று கூறி வந்த பானு, மலையாளத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2வது படத்தில் புக் ஆகியுள்ளார் பானு. மூன்று என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் பானுதான் நாயகி. ஹரியின் உதவியாளரான சரவணன் இப்படத்தை இயக்கப் போகிறார்.

படத்தில் நாயனாக நடிக்கவிருப்பது லிங்குச்சாமியின் சொந்தக்காரரும், பிறப்பு படத்தில் நடித்தவருமான பிரபா. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

மறுபடியும் வந்துட்டீங்களே, படிப்பு என்னாச்சு என்று பானுவிடம் கேட்டால், படிப்பு முடிந்து விட்டது. இதனால்தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நல்ல கேரக்டர்களாகப் பார்த்துப் பார்த்து நடிக்கப் போகிறேன் என்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil