»   »  பானுவும், மணியும்

பானுவும், மணியும்

Posted By:
Subscribe to Oneindia Tamil


தாமிரபரணியில் கலக்கிய பின்னர் தமிழை மறந்த பானு இப்போது மலையாளத்தில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். தமிழில் வில்லனாக நடிக்கும் கலாபவன் மணி நாயகனாக நடிக்கும் மலையாளப் படத்தில் புதிதாதக புக் ஆகியுள்ளார் பானு.

Click here for more images

தாமிரபரணி மூலம் நடிக்க வந்தவர் பானு (மலையாளத்தில் இவரது பெயர் முக்தா). தாமிரபரணி சிறப்பாக ஓடியும் கூட பானு தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்பவில்லை. படிக்கப் போகிறேன் என்பதைக் காரணம் காட்டி வந்த படங்களையெல்லாம் ஓரம் கட்டினார் பானு.

ஆனால் மறுபக்கம் மலையாளப் படங்களில் நடிக்க மட்டும் படு ஆர்வமாக உள்ளார். தற்போது புதிதாக கேரளா போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பானு.

இப்படத்தில் கலாபவன் மணிதான் ஹீரோ. சந்திரசேகரன் இயக்குகிறார். பெங்களூரைச் சேர்ந்த டி.கே.எம். குரூப் இதை தயாரிக்கிறது.

இப்படத்தின் கதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். அதாவது சத்யராஜ் அசத்திய வால்டர் வெற்றிவேல் படத்தின் கதையைத்தான் மசாலா மாற்றித் தடவி கேரளா போலீஸ் என்ற பெயரில் உருமாற்றுகிறார்களாம்.

ஏற்கனவே இப்படித்தான் கமல்ஹாசன் நடித்த 16 வயதினிலே படத்தை கருமாடிக் குட்டன் என்ற பெயரில் இதே கலாபவன் மணி நடிக்க உல்டா செய்தார்கள். இப்போது சத்யராஜ் படத்தை கையில் எடுத்துள்ளனர்.

கேரளா போலீஸ் படத்தில் நெடுமுடி வேணு, இன்னொசன்ட் உள்ளிட்ட பல பிரபலங்களும் உள்ளனராம்.

தமிழுக்கும் அப்படியே வந்துட்டுப் போங்க பானு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil