»   »  தனுஷ் அம்மா ஆனார் பானுப்பிரியா

தனுஷ் அம்மா ஆனார் பானுப்பிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் அசத்தல் நாயகியாக கலக்கி வந்த பானுப்பிரியா இப்போது அழகான அம்மா ஆகி விட்டார். பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடிக்கிறார் பானுப்பிரியா.

முன்னாள் நாயகிகளுக்கு கலைச் சேவையிலிருந்து அவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற மனம் வருவதில்லை. அக்கா, அம்மா, அண்ணி என ஏதாவது ஒரு கேரக்டரில் தலை காட்ட விரும்புவார்கள்.

முன்னாள் நாயகியான அர்ச்சனா, பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்போது பானுப்பிரியாவும் தனுஷின் அம்மா ஆகியுள்ளார்.

பொல்லாதவன் படத்தில் தனுஷின் அம்மாவாக நடிக்கிறாராம் பானுப்பிரியா. இப்படத்தில் தனுஷுக்கு அம்மா வேடத்தில் ஏதாவது ஒரு பிரபல நடிகையை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டபோது அனைவரின் ஓட்டுக்களையும் பெற்றவர் பானுப்பிரியாதான்.

இந்த வாய்ப்பை உடனே ஒத்துக் கொண்டாராம் பானுப்பிரியா. இதுகுறித்து பானுப்பிரியா கூறுகையில், மீண்டும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது சந்தோஷமாக உள்ளது.

இதற்கு முன்பு கூட எனக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வாய்ப்புகள் அளித்தனர். ஆனால் சில காரணங்களால் அவற்றை ஏற்க முடியாத நிலையில் இருந்தேன்.

ஆனால் இப்போது நான் ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். அதனால்தான் பொல்லாதவன் பட வாய்ப்பை தட்டாமல் ஏறறுக் கொண்டேன். பொல்லாதவன் படக் கதை என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இதில் நடிக்கவும் நல்ல வாய்ப்பு உள்ளது என்கிறார் சந்தோஷமாக.

மறுபடியும் பானுப்பிரியாவை பார்க்கப் போகிறோம் என்பதை நினைக்கவே சந்தோஷமா இருக்குல்ல?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil