»   »  பானு 'பூச்சாண்டி'!

பானு 'பூச்சாண்டி'!

Subscribe to Oneindia Tamil
Bhanu
தாமிரபரணி படத்துக்குப் பின்னர் தமிழில் காணாமல் போய் விட்ட பானு பூச்சாண்டி என்கிற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

தாமிரபரணியில் விஷாலுக்கு நாயகியாக வந்து அசத்தியவர் பானு. கேரள தேசத்திலிருந்து வந்த பானு, முதல் படத்தின் வெற்றியால் பல பட வாய்ப்புகளால் சூழப்பட்டார்.

ஆனால் படிக்கப் போவதால், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறி கேரளாவுக்கே திரும்பிப் போய் விட்டார். அங்கு போய் படிப்பில் கவனம் செலுத்திய பானு, இடை இடையே ஓரிரு மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் படிப்பை முடித்து விட்ட பானு மீண்டும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம். அதற்கு முதல் கட்டமாக மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார்.

பூச்சாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ்ப் படத்தில் பானு நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சக்சஸ்புல் தெலுங்குப் படமான ஹேப்பி டேஸ் படத்தில் நடித்த விஷ்ணு நடிக்கவுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ், ப்ரவீண்காந்த் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த அசோக் ராஜ், இப்படத்தை இயக்கி அறிமுகமாகிறார்.

இளம் காதலர்களாக வரும் பானும், விஷ்ணுவும் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கின்றனர். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்தும் வடிவேலு, காதலில் வெற்றி பெறவும் உதவுகிறார். இதுவரை நடித்திராத வித்தியாசமான, கனமான பாத்திரத்தில் காமெடிப் புயல் வடிவேலு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி மூலம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு காணாமல் போன பானு, பூச்சாண்டி மூலம் மறு பிரவேசத்தை சிறப்பாக ஆரம்பிக்கவுள்ளார். இப்படம் தமிழில் மீண்டும் ரவுண்டு வர நல்ல பிளாட்பாரமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர் உள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil