»   »  மீரா - பரத் பரவச முத்தம்!

மீரா - பரத் பரவச முத்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


உருக வைக்கும் உதட்டு முத்தம் பெற்ற நடிகைகள் வரிசையில் லேட்டஸ்டாக மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளார். அவருக்கு முத்தம் கொடுத்த பெருமைக்குரிய உதடுகளுக்குச் சொந்தக்காரர் பரத்.

தமிழ் சினிமாவில் முத்தக் காட்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. முன்பெல்லாம் ஹீரோ, ஹீரோயின் உதடுகளை நெருங்கி வருவது போல காட்டி விட்டு, அதை ஏதாவது பூ அல்லது புத்தகத்தால் மறைப்பது போல காட்டி விடுவார்கள். அப்படிச் செய்தால் இருவரும் உதடு பொருத்தி முத்தமிட்டுக் கொண்டார்கள் என்று அர்த்தமாம்.

ஆனால் கமல்ஹாசன் அந்த விதிமுறையை மீறி உதட்டோடு, உதடு பொருத்தி பகிரங்கமாகவே முத்தம் கொடுத்து தமிழ் சினிமாவின் முத்தக் காட்சிகளுக்கு புது உருவம் கொடுத்தார்.

சமீப காலமாக பலரும் முத்தக் காட்சிகளில் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளனர். நெஞ்சைத் தொடு படத்தில் ஜெமினியும், லஷ்மி ராயும் பரவசமாக முத்தம் கொடுத்துக் கொண்டனர். இதேபோல சமீபத்திலும் இரு படங்களில் நெருக்கமான உதட்டு முத்தம் இடம் பெற்றது.

இந்த நிலையில் நேபாளி படத்திலும் அப்படி ஒரு அசத்தல் முத்தக் காட்சி இடம் பெறுகிறதாம். முத்தம் கொடுத்தவர் பரத், வாங்கியவர் மீரா ஜாஸ்மின். ஒரு பாடல் காட்சியில்தான் இந்த பரவச முத்தம் இடம் பெற்றுள்ளதாம்.

இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மெனக்கெட்டு நடத்தி வருகிறார் பரத். கெட்டப்பையும் செமத்தியாக மாற்றியுள்ளார்.

அவருக்கு ஜோடியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின், திரைக்கு வெளியேயும் பரத்துக்கு நெருங்கிய தோழி ஆவார். இருவருக்கும் இடையே படத்தில் மட்டுமல்லாது, படத்துக்கு வெளியேயும் நல்லுறவு நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட படத்தின் இயக்குநர், பாடல் காட்சி ஒன்றில் பரத், மீரா முத்தக் காட்சியை சேர்த்து விட்டார்.

இதுகுறித்து பரத் கூறுகையில், பிருந்தா மாஸ்டர்தான் இந்தப் பாட்டுக்குரிய நடனத்தை வடிவமைத்துள்ளார். மிகவும் உணர்ச்சிகரமான பாடல் இது. இதில் முத்தக் காட்சியும் இடம் பெறுகிறது. கதைக்கு தேவைப்பட்டதால், அந்தக் காட்சிக்குத் தேவைப்பட்டதால் முத்தம் கொடுப்பது போல எடுத்தார்கள் என்றார்.

இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளாராம் தேவை. பாடல்கள் அனைத்தையும் காதல் ரசம் சொட்டச் சொட்ட எடுத்துள்ளனராம்.

அப்ப, ரசிகர்களுக்கு வேட்டைதான்!

Read more about: bharath meerajasmine

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil