»   »  பரபரக்கும் பாரதி

பரபரக்கும் பாரதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்முவாகிய நான் பாரதி அதற்குள் கோலிவுட் தயாரிப்பாளர்களிடையே பிரபலமாகி விட்டார்.

விபச்சார வேடத்தில் நடிக்க யாருக்குத்தான் துணிச்சல் வரும். பலரும் நடிக்க அஞ்சிய இந்தக் கேரக்டரில் படு துணிச்சலாக ஒப்புக் கொண்டு படு தில்லாக கிளாமர் களத்தில் குதித்து அமர்க்களப்படுத்தி வருகிறார் அம்முவாகிய நான் படத்தின் நாயகி பாரதி.

கோவை தந்த கொய்யாக்கனிதான் பாரதி. பார்த்திபன் நடிக்கும் அம்முவாகிய நான் படத்தின் நாயகிதான் பாரதி. எழுத்தாளராக இப்படத்தில் நடிக்கிறார் பார்த்திபன். அவருக்கு ஆத்ம திருப்தி தரும் தோழியாக வருகிறார் பாரதி.

பத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார். ரூபஸ் பார்க்கர் படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே இருவரும் இணைந்து பல்லவன் என்ற படத்தைக் கொடுத்துள்ளனர்.

படத்தின் கதையை பல ஹீரோயின்களிடம் சொல்லியபோது யாரும் நடிக்க முன்வரவில்லையாம். இப்படத்தில் நடிக்க மறுத்த பின்னர்தான் புதுப்பேட்டை படத்தில் விபச்சாரியாக நடித்தாராம் சினேகா.

இதனால் கடுப்பான பத்மா மகன் மும்பைக்குப் பறந்து அங்கு பாலிவுட் நடிகைகள் பலரையும் அணுகி கேட்டுப் பார்த்தார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இந்த நிலையில்தான் நான் செய்கிறேன் என்று நெஞ்சு நிமிர்த்தி தைரியமாக முன்வந்தார் பாரதி.

எப்படி தைரியமாக இப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்டபோது, இந்தப் படத்தில் நடித்தால் நிச்சயம் எனக்கு நல்ல பெயர்தான் கிடைக்கும். மேலும் பார்த்திபன் போன்ற சீனியர் கலைஞர்களுடன் இணைந்து நடிப்பது புது அனுபவமாக இருக்கும். பார்த்திபனுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பது படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்னர்தான் தெரிய வந்தது.

எனக்கு நடிப்பில் நிறைய ஆலோசனைகளைச் சொல்கிறார் பார்த்திபன். அவருடன் நடிப்பதில் பெருமையாக உள்ளேன். படம் எப்போது ரிலீஸாகும் என ஆவலாக காத்துள்ளேன் என்றார் பரவசமாக.

பத்மா மகனிடம் படம் குறித்து கேட்டபோது, தமிழ்ப் படங்களில் கண்களிலிருந்து காதல் கிளம்புவது போலத்தான் காட்டுவார்கள். அது அப்படியே இதயத்துக்கு நழுவி, இச்சையில் முடியும். ஆனால் அம்முவாகிய நான் படத்தில் இது தலைகீழ்.

இச்சையில் தொடங்கி, இதயத்திற்கு இடம்மாறி பின்னர் காதலாக மாறும். அந்த ரோலை அழகாக உள்வாங்கி அற்புதமாக நடித்துள்ளார் பாரதி. பார்த்திபனைப் பற்றிச் சொல்ல வேண்டாம். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்றார்.

சீக்கிரா வாம்மா அம்மும்மா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil