»   »  மலையாளத்தில் பாரதி

மலையாளத்தில் பாரதி

Subscribe to Oneindia Tamil
Bharathi
அம்முவாகிய நான் பாரதி தமிழில் நல்ல பெயர் வாங்கிய கையோடு மலையாளத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளார்.

அம்முவாகிய நான் படத்தில் விபச்சாரப் பெண் கேரக்டரில் படு இயல்பாக நடித்துப் பெயரைத் தட்டிச் சென்றவர் பாரதி. அவரது அழகான உடல் வாகும், தப்பில்லாத நடிப்பும், அசத்தலாக இருந்தன.

இப்போது பாரதியைத் தேடி பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அகத்தியன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் பாரதிதான் நாயகி.

இதுதவிர தக்காளி சீனிவாசனின் திரில்லர் படமான சற்று முன் கிடைத்த தகவல் படத்திலும் அவர் நடித்து வருகிறார். மேலும் ஒரு படமும் அவர் கையில் உள்ளது.

இந்த நிலையில், அம்முவைத் தேடி அதாவது பாரதியைத் தேடி மலையாளப் பட வாய்ப்பும் வந்துள்ளது. அம்முவாகிய நான், மலையாளத்தில் அம்மு என்ன நிஜன் என்ற பெயரில் டப் ஆகிச் சென்று அங்கும் வரவேற்பைப் பெற்றது. இதனால் வந்த பட வாய்ப்பு இது.

இதில் பாரதியுடன் ஜோடி போடப் போகிறவர் மம்முட்டி. தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களில் நடிக்காலமே என்று பாரதியை மம்முட்டி தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் முதல் படத்திலேயே மம்முட்டியுடன் ஜோடி போடுகிறார் பாரதி.

மம்முட்டி அடுத்து நடிக்கவுள்ள அண்ணன் தம்பி என்ற படத்தில் பாரதியும், மம்முட்டியும் இணைகிறார்கள். இதில் மம்முட்டி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பாரதி தவிர மேலும் ஒரு ஹீரோயினையும் போடவுள்ளனர்.

டிசம்பரில் ஷூட்டிங்கை ஆரம்பித்து முழு வீச்சில் அண்ணன் தம்பியை வளர்க்கப் போகிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil