»   »  பாரதி.. பாரதி..

பாரதி.. பாரதி..

Subscribe to Oneindia Tamil
வயசுப் பசங்க படத்தில் சின்ன ரோலில் அறிமுகமாகி கலக்கல் படத்தில் ஹீரோயினான பாரதி மீண்டும் சின்ன ரோலுக்குப்போய்விட்டார்.

ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாய் இத்தனை காலம் இருந்து பார்த்துவிட்டு மும்பை, தெலுங்கு, கேரளத்துத்துவரவுகளுடன் போட்டி போட முடியாமல் இப்போது செகண்ட் ஹீரோயினாக நடிக்கத் தயாராகிவிட்டார்.

காதல் படத்தில் பரத் ரோலில் நடிக்க இருந்தது தனுஷ் என்பதும், கால்ஷீட் விவகாரத்தால் அது பரத்தின் கைக்குப் போனதும்உங்களுக்குத் தெரிந்த செய்தி தான்.

அதே போல ஹீரோயின் சந்தியாவின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது பாரதி தான். ஆனால், கலக்கல் படத்தில் இவர் காட்டியகவர்ச்சியே அவருக்கு எதிராகப் போய்விட்டதாம். ஓவர் கவர்ச்சி காட்டிய பொண்ணு ஸ்கூல் கேர்ள் கேரக்டர் செய்தால் சரியாஇருக்குமா (இவர் போன வருடம் தான் பிளஸ் டூ முடித்தார்) என்ற சந்தேகத்தால் அவரை விட்டுவிட்டு சந்தியாவைஹீரோயினாக்கிவிட்டார்களாம்.

அந்த வருதத்தில் இருந்து பாரதி இன்னும் மீளவில்லை.

வயசுப் பசங்களில் அறிமுகமானாலும் பாரதியை அடையாளம் காட்டியது கலக்கல் படம். ஆனால், படம் சரியாகப் போகாததால்பாரதியை கண்டுகொள்வார் யாருமில்லை.

ஆனாலும், நான் தாங்க கலக்கல் பாரதி என்று கூறிக் கொண்டு தனது கிக் ஊட்டும் ஆல்பங்களுடன் கோலிவுட்டை வலையவந்து பார்த்தார். அசையாலையே.. ஒரு அணுவும் அசையவில்லை. காதல் பட டீம் மட்டுமே பாரதி குறித்து யோசித்துவிட்டுகைவிட்டது.

இதனால் தனது பிடிவாதத்தை கோயம்பேட்டில் பஸ் ஏத்தி கோயம்புத்தூருக்கு அனுப்பிவிட்டு செகண்ட் ஹீரோயின் ரோல்செய்யவும் ரெடி என்று இறங்கிவந்துவிட்டார் இந்த கோயம்புத்தூர் அழகி.

இதனால் இப்போது பாரதியின் கைவசம் இரண்டு படங்கள். 50க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள் இணைந்து ஒரு படத்தைஎடுக்கின்றனர். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மை தான். 50 பேரில் சிலர் காசு போட்டும், பலர் தங்கள் கால்ஷீட்டைஇலவசமாகத் தந்தும் (அதாவது படத்தின் லாபத்தை பின்னர் பிரித்து எடுத்துக் கொள்ளும் திட்டத்துடன்) இந்தப் படத்தைதயாரிக்கிறார்கள்.

படத்தின் பெயர் யுகா. இதில் பாரதி, ரிச்சர்ட், பாய்ஸ் மணிகண்டா, சுகுமார், சந்தோஷி ஆகியோர் தவிர கவர்ச்சி ராணிசொர்ணமால்யாவும் நடிக்கின்றனர்.

இவர்கள் போதாது என மீனு, புவனா, மைதிலி, சுவேதா என ஏகப்பட்ட இளம் கன்றுகளும் படத்தில் அறிமுகமாகின்றன.

படத்தில் சொர்ணா தவிர பாரதி உள்ளிட்ட இளசுகள் அனைவருக்கும் கல்லூரி மாணவிகள் ரோல் தானாம். சென்னை, பாண்டிச்சேரிஆகிய பகுதிகளில் சுறுசுறுப்பாக சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

படத்தை இயக்குவது யார் கண்ணன். இந்தப் படத்தில் இத்தனை இளவட்டங்கள் நடித்தாலும் பாரதிக்குத் தான் முக்கியகேரக்டராம். எல்லோருக்கும் ஈக்குவல் வெயிட்டேஜ் உள்ள கேரக்டர்கள் தான் என்றாலும் படத்தில் ஹீரோயின் என்றால் அதுபாரதி தானாம். ஆனாலும் தனிப்பட்ட முறையில் தன்னை முன்னிருத்தும் ஹீரோயின் கேரக்டர் இல்லாததில் பாரதிக்கு வருத்தமே.

அதே போல பாரதியின் கைவசம் உள்ள இன்னொரு படம் கலர்ஸ். இதில் புதுமுகம் சீனு என்பவர் ஹீரோவாக அறிமுகமாக பாரதிமற்றும் தத்தித் தாவுது மனசு புகழ் சிந்தூரி ஆகியோர் இரட்டை ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

காமெடியும் காமநெடியும் (அதாங்க.. கவர்ச்சி) கலந்த கதையாம். இதில் சிந்தூரி மூலம் பாரதிக்கு கடும் கிளாமர் போட்டிஉண்டாகியிருக்கிறது. சிந்தூரி எந்த லெவலுக்கும் போகக் கூடியவர் என்பதால் பாரதியும் கை இரண்டையும் பரபரவெனதேய்த்துக் கொண்டு கோதாவில் குதித்து கவர்ச்சியில் கலக்கி வருகிறாராம்.

படத்தில் ஸ்மிதா, தனுஷா, ஆர்த்தி ஆகியோரின் சைடு ஆட்டங்களும் உண்டு. சென்னையில் சூட்டிங்கை முடித்துக் கொண்டுபாடல் காட்சிகளுக்காக கோடம்பாக்க விதி எண் 111ன்படி (தயாரிப்பாளருக்கு 3 பட்டை நாமம் போட!!) வெளிநாட்டுக்குப்போகிறார்களாம்.

Read more about: 2 films, bharathi, busy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil