»   »  துறக்கும் பாவனா!

துறக்கும் பாவனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். ஆனால் பணம் வந்தால் பலதும் மறந்து போகும், பறந்து போகும். அவ்வளவு வலிமையான வெப்பன் பணம். பாவனா மட்டும் அதற்கு விதி விலக்காக முடியுமா!

தமிழ் சினிமாவில் குத்து விளக்கு நடிகை பாவனா. அதாவது, கிளாமர் பக்கம் இன்னும் தலை காட்டாத நடிகை. ஆனால் இப்போது அதற்கும் துணிந்து விட்டார் பாவனா. ஆனால் காட்டப் போவது தமிழில் இல்லையாம், தெலுங்கிலாம்.

தெலுங்கில் முழு வீச்சில் முங்குவற்கு முன்பாக, சில ஒத்திகைகளில் இறங்கியுள்ளார் பாவனா. முதல் கட்டமாக சுடிதார் போன்ற முழுக்க மூடும் ஆடைகளுக்கு விடை கொடுத்துள்ளார். கவர்ச்சிகரமான டிரஸ் போட முடிவு செய்துள்ளார்.

நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வர வேண்டும் என்றால் சண்டைப் பயிற்சி, டான்ஸ் என சில கட்டாய விஷயங்கள் உள்ளன. இதில் தேறாத யாரும் ஹீரோவாக முடியாது. இதெல்லாம் இல்லாமலும் சிலர் ஹீரோவாக காலத்தைக் கழிப்பதுண்டு. ஆனால் அவர்களிடம் காந்தி தாத்தாக்கள் கத்தை கத்தையாக இருப்பார்கள். அதைக் கொடுத்து நடிப்பைப் பிடிப்பார்கள் இந்த புண்ணியாத்மாக்கள்.

ஆனால் நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்குவது பெரிய மேட்டரே இல்லை. கவர்ச்சி என்ற பிரம்மாஸ்திரத்தை பிரமாதமாக எய்தால் போதும், வாய்ப்பு மழை என்ன, சுனாமியே வந்து அள்ளிக் கொண்டு போய் விடும்.

நடிக்கவே தெரியாமல், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் தேவதைகளும் உண்டு. கிளாமரை வைத்து கரை சேர்ந்தவர்கள் அவர்கள்.

ஆனால் அழகோடு, நடிப்பும் கூடவே அமையப் பெற்றவர் பாவனா. சித்திரம் பேசுதடி படத்தில் அவர் அட்டகாசமாக வந்து போனதைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள். இருப்பினும் கிளாமர் காட்ட மாட்டேன் என்று ஆரம்பத்திலிருந்தே தெளிவாக கூறி வருவதால், அதற்கேற்ற வகையில்தான் வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் படமாக இருந்தாலும் சரி, அஜீத் படமாக இருந்தாலும் சரி, கிளாமர் காட்டாமல்தான் நடிப்பேன் என்று இன்று வரை உறுதியாக உள்ளார் பாவனா.

ஆனால் தெலுங்கில் நடிக்க வேண்டுமானால் இப்படியெல்லாம் பேசப்படாதே. தெலுங்கில் நடிகை என்றால் கிளாமர் காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத யுனிகோட் விதி.

தமிழில் கமுக்கமாக நடித்து விட்டு ஓய்ந்த சுஹாசினி, ஸ்ரீதேவி, சினேகா போன்றோர் கூட தெலுங்கில் கண்டாங்கிச் சேலையை கட்டவிழ்த்து கரைபுரண்ட வரலாறுகள் உள்ளன. தமிழில் பல்லை மட்டுமே பளிச்சென காட்டி நடித்த இவர்கள், தெலுங்கில் பலதையும் காட்டி பயமுறுத்தினார்கள்.

இப்போது இந்த எலைட் குரூப்பில் பாவனாவும் சேருகிறார். தெலுங்கில் நடிக்க முடிவு செய்து விட்ட பாவனா அதற்காக தெலுங்கு கற்க ஆரம்பித்துள்ளார். அடுத்து எப்படி கிளாமர் காட்டலாம், எந்த அளவுக்குக் காட்டலாம் என திட்டமிட ஆரம்பித்து விட்டார்.

பாவனாவின் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவை அறிந்த சில தயாரிப்பாளர்கள் அணுகி ஆவலோடு கால்ஷீட் கேட்டுள்ளனராம். சம்பளத்தையும் இரண்டு மடங்கு அதிகமாக தருவதாகவும் கூறியுள்ளனராம். ஆனால் கிளாமர் மட்டும் சிறப்பாக, சிலிர்ப்பாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளனராம்.

கிளாமராக நடிக்கலாம் என பாவனாவின் பெற்றோரும், உற்ற தோழர்களும், தோழிகளும் பச்சைக் கொடி காட்டியுள்ளனராம். ஸோ, விரைவில் பாவனா புயல், டொலிவுட்டை சுழற்றியடிக்கப் போகிறது.

தெலுங்கு கற்பதற்குப் பதில், கிளாமர் மொழியை பாவனா கற்றுக் கொண்டால் ரசிகர்களுக்கு செளகரியமாக இருக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil