»   »  பாவனாவை தூக்கினார் பாலா

பாவனாவை தூக்கினார் பாலா

Subscribe to Oneindia Tamil

நான் கடவுள் படத்திலிருந்து பாவனாவை தூக்கி விட்டார் பாலா.

பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாவனாவை புக் செய்தார் பாலா. சில காட்சிகளையும் அவரை வைத்து எடுத்தார்.

ஆனால் அவர் குறித்து பாலாவுக்கு திடீரென அதிருப்தி எழுந்தது. இதனால் பாவனாவை நீக்க அவர் முடிவு செய்துள்ளதாக நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது பாவனாவை அதிகாரப்பூர்வமாக தூக்கி விட்டாராம் பாலா.

மீரா ஜாஸ்மினை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க அவர் முயற்சி செய்து வருகிறார். மீரா தவிர மேலும் இரு புதுமுகங்களும் பாலாவின் பரிசீலனையில் உள்ளனராம்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சினைகள் தலை தூக்கி வந்தன. முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கும், பாலாவுக்கும் இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது. அடிதடி வரை அது போனதாக கூறப்பட்டது.

பின்னர் எல்லாம் சரியாக ஹீரோ ஆனார் ஆர்யா. பின்னர் பாவனாவின் மீது பாலாவுக்கு அதிருப்தி எழுந்தது. பாவனாவின் கால்ஷீட் சொதப்பல்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் குழப்பத்தில் இருந்தார் பாலா. இந்த நிலையில் சமீபத்தில் பாவனா நடித்து வெளியான தீபாவளி, கூடல் நகர் ஆகிய படங்களைப் பார்த்தார் பாலா. அதில் அவரது நடிப்பும், கேரக்டர்களும் பாலாவின் அதிருப்தியைக் கூட்டும் வகையில் இருந்தன.

இதையடுத்து பாவானாவை தூக்கி விட முடிவு செய்தார் பாலா. தற்போது மீரா ஜாஸ்மினை ஹீரோயினாக்க பாலா முடிவு செய்துள்ளார். அதேசயம், இரு புதுமுகங்களையும் அவர் அழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளாராம்.

நான் கடவுள் நாயகி யார் என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil