»   »  'தாதா' பாவனா!

'தாதா' பாவனா!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கிளார் ரோல்களில் அசத்தி வரும் பாவனா, மலையாளத்தில் கிளாமரே இல்லாத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கப் போகிறார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து பின்னர் அங்கிருந்து தெலுங்குக்கும் தாவியவர் பாவனா.

இரு மொழிகளிலும் கிளாமர் கலந்த கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் பாவனா, தற்போது தமிழில் 3 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது தாதா என்ற பெயரில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் நடிக்க அவரைக் கூப்பிட்டுள்ளனர். இது மட்டுமே தாய் மொழியில் பாவனா வைத்திருக்கும் ஒரே படம்.

பாவனாவுக்கு முற்றிலும் கிளாமர் இல்லாத கேரக்டராம் இது. ஸ்ரீகுட்டி என்ற பெயரில் நடிக்கிறார். பிஜூ மேனன் இவரது தந்தையாக நடிக்கிறார்.

60 வயது சுதாகரன் என்ற கதாபாத்திரத்தில் பிஜூ மேனன் நடிக்கிறார். இவரது மகளாக வருகிறார் பாவனா.

தந்தைக்கும், மகளுக்கும், ஒரு சினிமா யூனிட்டுடன் தொடர்பு உண்டாகிறது. இருவரும் பட யூனிட்டோடு சேர்ந்து ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.

படத்தில் ரம்யா வேணுகோபால், விஜயராகவன், விஜய் மேனன் ஆகிேயாரும் உள்ளனர். பிஜூ சி. கண்ணன் படத்தை இக்கப் போகிறார்.

தாதா யாரு, பாவனாவா?

Read more about: bhavna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil