»   »  பாவனாவிடம் மாதிரி என்னிடம் யாராவது வாலாட்டினால் கொன்னே போட்டுடுவேன்: சூர்யா நாயகி ஆவேசம்

பாவனாவிடம் மாதிரி என்னிடம் யாராவது வாலாட்டினால் கொன்னே போட்டுடுவேன்: சூர்யா நாயகி ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை பாவனாவுக்கு நடந்தது போன்று தன்னிடம் யாராவது தவறாக நடந்திருந்தால் அவர்களை கொலை செய்திருப்பேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங்.

மகேஷ் பாபு முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் தான் நாயகி. மேலும் செல்வராகவன் சூர்யாவை வைத்து இயக்கும் படத்திலும் ராகுலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் பாவனாவுக்கு நடந்த கொடுமை பற்றி ராகுல் ப்ரீத் சிங் கூறுகையில்,

அதிர்ச்சி

அதிர்ச்சி

நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மனிதர்களே கிடையாது. இது ஒரு வெட்கம்கெட்ட செயல் ஆகும்.

கொலை தான்

கொலை தான்

பாவனா இடத்தில் நான் இருந்து யாராவது என்னை மானபங்கம் செய்தால் அவர்களை கொலை செய்திருப்பேன். நான் ஒரு தடகள வீராங்கனை. எப்பவும் ஃபிட்டாக இருப்பவள்.

ஜிம்

ஜிம்

படப்பிடிப்பில் நான் பிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சும்மா உட்காராமல் நேராக ஜிம்முக்கு சென்றுவிடுவேன். ஃபிட்டாக இருப்பது எனக்கு மிகவும் முக்கியம்.

அம்மா

அம்மா

நான் வெளியே கிளம்பினால் பார்த்துப் போ என்று அம்மா சொல்வார்கள். காரில் டிரைவர் இருக்கிறார் அப்புறம் என்ன என்று நினைப்பேன். பாவனா சம்பவத்திற்கு பிறகு யாரை நம்புவது, நம்பக் கூடாது என்று தெரியவில்லை என்று ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

English summary
Bhavana incident: Rakul Preet Singh's bold statement Rakul Preet Singh said that if ayone misbehaves with her like Bhavana she will kill them as she is extremely fit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil