»   »  நேற்று பாவனா துணிந்து செய்த செயல்: பாராட்டும் திரையுலகம்

நேற்று பாவனா துணிந்து செய்த செயல்: பாராட்டும் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை பாவனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பில் இருந்து வீட்டுக்கு திரும்பிய நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன பாவனா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கினார்.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் ஆதம் படத்தின் நாயகியாக பாவனா ஒப்பந்தமானார். இதையடுத்து நடந்ததையே நினைத்து வீட்டில் முடங்காமல் மீண்டும் நடிக்க வருமாறு ப்ரித்விராஜ் அவரை ஊக்குவித்தார்.

பாவனா

பாவனா

ப்ரித்விராஜ் கொடுத்த தைரியத்தில் பாவனா ஆதம் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட போதிலும் அதை தாண்டி மீண்டும் நடிக்க வந்த அவரை பார்த்து திரையுலகினர் பெருமிதம் கொண்டுள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

ஆதம் படப்பிடிப்பில் முதன்முதலாக கலந்து கொண்ட பாவனாவை பாராட்டி ஃப்ரித்விராஜ் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். பாவனாவின் துணிச்சலை, தன்னம்பிக்கையை அவர் பாராட்டியுள்ளார்.

நடிகைகள்

நடிகைகள்

பாவனா துணிந்து போலீசில் புகார் கொடுத்தது பல நடிகைகளுக்கு தைரியத்தை அளித்துள்ளது. பாலியல் தொல்லைகளுக்கு ஆளான நடிகைகள் பலர் தற்போது அதை வெளியே கூறத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bhavana, the charming actress is finally back to the film sets. Recently, actor Prithviraj confirmed that Bhavana has joined the sets of his upcoming Jinu Abraham movie Adam, and starts her portions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil