»   »  அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?

அந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் பாவனா: காரணம் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு நடிக்க மறுத்த பாவனாவை சக கலைஞர்கள் ஊக்குவித்ததையடுத்து அவர் விரைவில் பணிக்கு திரும்புகிறார்.

நடிகை பாவனா படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போயுள்ள பாவனா தொடர்ந்து நடிக்க அஞ்சியுள்ளார்.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

பாவனா ப்ரித்விராஜ் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜினு ஆபிரகாம் இயக்கும் அந்த படத்திற்கு ஆதாம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நரேனும் உள்ளார்.

பாவனா

பாவனா

ஆதாம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. பாவனாவோ தன்னால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் நம்பிக்கை அளித்துள்ளனர்.

நடிப்பு

நடிப்பு

சக கலைஞர்கள் அளித்த நம்பிக்கையால் பாவனா விரைவில் நடிக்க வருகிறார். பாதிக்கப்பட்டு நொந்து போயுள்ள பாவனாவுக்கு மலையாள திரையுலகம் பேராதரவாக உள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பாவனாவுக்கு ஆறுதல் கூறுவதோடு நின்றுவிடாமல் அவர் தொடர்ந்து நடிக்க ஊக்குவிக்கும் மலையாள திரையுலகினரை பார்த்து அனைவரும் பெருமிதப்படுகிறார்கள்.

English summary
Bhavana who was not ready to work after that unfortunate incident will join her new movie team soon. She is set to resume work after her co-stars encouraged her to do so.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil