»   »  குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்! - நடிகை பாவனா

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்! - நடிகை பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: என்னைக் கடத்தி பாலியல் தொல்லை தந்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை பாவனா கூறியுள்ளார்.

சித்திரம் பேசுதடி, கூடல்நகர், வெயில், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் பாவனா.

Bhavana's new vow

யாருமே எதிர்ப்பாராத வகையில் பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாவனா கடத்தலில் பிடிபட்டவர்களின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ஒரு பிரபல நடிகரும் அரசியல்வாதியின் மகன்கள் இரண்டு பேரும் அடிக்கடி அவர்களிடம் பேசி இருப்பது தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் இந்த கடத்தலுக்காக ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பாவனாவை மீண்டும் நடிக்குமாறு மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று பாவனா அறிவித்து இருக்கிறார். இதை உறுதி செய்த நடிகர் பிருதிவிராஜ் கூறும்போது, "பாவனாவும் நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளோம். தற்போது பாவனா, தன்னிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது வரை கேமரா முன்னால் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்," என்றார்.

Read more about: bhavana, malayalam, பாவனா
English summary
Actress Bhavana says that she wouldn't appear in any movies till the culprits punished.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil