»   »  என்னைத் துன்புறுத்தியவர்களை துரத்திப் பிடித்த போலீஸ் - பாவனா பாராட்டு

என்னைத் துன்புறுத்தியவர்களை துரத்திப் பிடித்த போலீஸ் - பாவனா பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னைத் துன்புறுத்தியவர்களை போலீசார் துரத்திப் பிடித்தது ஆறுதலாக உள்ளது என கூறியுள்ளார் நடிகை பாவனா.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் திருச்சூருக்கு வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு வேனில் வந்த 5 பேரால் கடத்தப்பட்டு, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இதுகுறித்து பாவனா அளித்த புகாரின்பேரில், நெடும்பாசேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில், விஜேஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Bhavana's new Vow

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முதல்முறையாகத் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகை பாவனா.

அதில், "வாழ்க்கை என்னைச் சிலமுறை கீழே தள்ளியுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை அது காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள் நான். ஆனால் ஒன்று, அவற்றிலிருந்து நான் எப்போதும் மீண்டு வருவேன். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.. என்னைத் துன்புறுத்தியவர்களை இத்தனை சீக்கிரம் துரத்திப் பிடித்த போலீசாரைப் பாராட்டுகிறேன்," என்று கூறியுள்ளார்.

English summary
Actress Bhavana has vowed that she would return back from all her mental struggle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil