Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரொம்ப மிஸ் பண்றோம் சேச்சி.. கொள்ளை அழகில் குதூகல ஹீரோயின்.. பாசம் கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள கொள்ளை அழகு புகைப்படங்களை நெட்டிசன்ஸ் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கொரோனா லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு நடிகைகள், போடோஷூட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எந்த நடிகையின் இன்ஸ்டாவுக்கு சென்றாலும் குபுக்கென வந்து, கொட்டுகிறது போட்டோஸ்.

விதி விலக்கா என்ன?
நடிகை பாவனா மட்டும் விதி விலக்கா என்ன? அவரும் அப்படித்தான். பெரும்பாலான நடிகைகள் கிளாமர் மற்றும் பிகினி உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்காக வெளிமாநில கடற்கரைக்குச் சென்று ஸ்பெஷல் போட்டோஷுட் நடத்துகின்றனர்.

கொள்ளை அழகு
இவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஹோம்லி லுக் ஸ்டில்ஸை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், சில நடிகைகள். அவர்களில் பாவனாவும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்டிருந்த போட்டோஸ், ரணகளமாக வைரலான நிலையில், இப்போது புதிய கொள்ளை அழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் கொண்டான்
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், எதிரி, தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகை பாவனா, தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இப்போது கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்துக்குப் பிறகு அதிகம் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது பிசி.

இன்ஸ்பெக்டர் விக்ரம்
கன்னடத்தில் இவர் நடித்த ரோமியோ என்ற படத்தை தயாரித்த நவீனுடன் பாவனாவுக்கு காதல் ஏற்பட, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இப்போது கன்னடத்தில் நடித்து வரும் அவர், இன்ஸ்பெக்டர் விக்ரம், சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2, கோவிந்தா கோவிந்தா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

மிஸ் பண்றோம்
பாவனா, இப்போது வெளியிட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. பல நெட்டிசன்ஸ், சேச்சி, தமிழ்ல உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என்று கூறியுள்ளனர். ஹாய் சொல்லுங்க என்ற கேட்ட பலருக்கு தாராளமாக வந்து பதில் சொல்லி இருக்கிறார், நடிகை பாவனா.

மேக்னட் கண்கள்
சில நெட்டிசன்ஸ், நீங்க சும்மாவே செம அழகு, உங்களுக்கு எதுக்கு மேக்கப்? அது இல்லாத போட்டோவை போடுங்க என்று கூறியுள்ளனர். உங்களுக்கு மேக்னட் கண்கள் என்றும் இதே போல கண்கள் யாருக்கும் அமையாது என்றும் சிலர் வர்ணித்துள்ளனர்.