»   »  இயக்குநர்களுடன் 'அட்ஜஸ்ட்' செய்து பல முறை அபார்ஷன் செய்தேனா?: பாவனா பளிச் பேட்டி

இயக்குநர்களுடன் 'அட்ஜஸ்ட்' செய்து பல முறை அபார்ஷன் செய்தேனா?: பாவனா பளிச் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: எனக்கு அபார்ஷன் ஆனதாக தான் அதிகமாக கிசுகிசுக்கள் வந்துள்ளது என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த பாவனா. வெயில், தீபாவளி, அசல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மலையாள படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல மலையாள பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

கிசுகிசு

கிசுகிசு

நான் 15 வயதில் நடிக்க வந்தேன். நடிக்க வந்த காலத்தில் இருந்து என்னைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக அபார்ஷன் கிசுகிசுக்கள் தான்.

அபார்ஷன்

அபார்ஷன்

வருஷா வருஷம் குறைந்தது பத்து முறையாவது எனக்கு அபார்ஷன் ஆனதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுவும் நான் அமெரிக்கா, அலுவா, திருச்சூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அபார்ஷன் செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.

படம்

படம்

பட வாய்ப்புக்காக நான் பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்தேனாம், கர்ப்பமானேனாம், கருவை கலைத்தேனாம். அப்பா எத்தனை எத்தனை கிசுகிசுக்கள் வந்தன.

வெளிப்படை

வெளிப்படை

நான் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவள். இதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளது. ஆனால் அதற்காக நான் என் குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றார் பாவனா.

English summary
Actress Bhavana has talked about abortion rumours that has been doing rounds for a long time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil