»   »  நடிகை பாவனாவுக்கு டும் டும் டும்: மாப்பிள்ளை பெயரை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்

நடிகை பாவனாவுக்கு டும் டும் டும்: மாப்பிள்ளை பெயரை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பாவனாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

சித்திரம் பேசுதடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஹனி பீ 2 மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணம்

திருமணம்

பாவனாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அவருக்கு மிகவும் நெருக்கமான தோழிகள் உறுதி செய்துள்ளனர்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

பாவனா கன்னட திரையுலகின் இளம் தயாரிப்பாளர் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். அவரை தான் திருமணம் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

பாவனா

பாவனா

தனது காதலர் பெயரை பாவனா இதுவரை தெரிவிக்கவில்லை. திருமணம் நிச்சயமாகியும் பெயரை கூறவில்லை. திருமணம் வரை அவரின் பெயரை ரகசியமாகவே வைக்க உள்ளாராம் பாவனா.

அழைப்பு

அழைப்பு

பாவனாவின் திருமணம் பதிவுத் திருமணமாம். நெருங்கிய தோழிகள், குடும்பத்தார் என 50 பேருக்கு மட்டுமே அழைப்பாம். இந்த ஆண்டே பாவனாவின் திருமணம் நடக்க வேண்டியது. அவரது தந்தை மரணம் அடைந்ததால் திருமணம் தள்ளிப் போடப்பட்டது.

English summary
Bhavana is finally all set to tie the knot with her long-time boyfriend. Some close friends of the actress recently confirmed that the couple is planning to enter the wedlock, in April 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil