»   »  பாவனாவின் பிராக்டிஸ்!

பாவனாவின் பிராக்டிஸ்!

Subscribe to Oneindia Tamil
Bhavana with Vinay

'பாஸ்கட் பால்' வீராங்கனையாக நடிப்பதால் தினசரி கூடைப்பந்து ஆட்டம் விளையாடி பிராக்டிஸ் செய்து வருகிறாராம் பாவனா.

தான் நடித்து லேட்டஸ்டாக வெளியான ராமேஸ்வரம் வெற்றிப் படமான சந்தோஷத்தில் ஜெயம்கொண்டான் படத்தில் நடிக்கப் போய் விட்டார் பாவனா.

இப்படத்தில் லேகா வாஷிங்டனும் இருக்கிறார். இருந்தாலும் அவர் இரண்டாவது நாயகிதான். பாவனாவுக்கே அதி முக்கியத்துவமம் கொடுக்கப்பட்டுள்ளதாம் கதையில்.

இப்படத்தில் கூடைபந்தாட்ட வீராங்கனையாக வருகிறாராம் பாவனா. ஆனால் கூடைப்பந்தாட்டம் என்ற பெயரைத் தவிர அதுகுறித்து வேறு ஒன்றுமே தெரியாதாம் பாவனா.

அட்லீஸ் விளையாடுவது போல பாவனை காட்டுவதற்காவது, ஆட்டத்த்தை தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக இப்போது அதி தீவிரமாக கூடைப்பந்தாட்ட பிராக்டிஸில் ஈடுபட்டுள்ளாராம் பாவனா.

தினசரி காலையும், மாலையும் கூடைப்பந்தாட்டம் ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம். முன்பு அ, ஆவன்னா கூட தெரியாமல் இருந்த பாவனா இப்போது டிஸ்ட்ரிக்ட் லெவல் டோர்னமென்டுகளில் கலந்து கொண்டு கலக்கும் அளவுக்கு தேறி விட்டாராம்.

இப்படித்தான் முன்பு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ஒரு படத்தில் ஆட்டோ ஓட்டுபவராக நடிக்க வேண்டியதாயிற்று. இதற்காக ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டு அசத்தினார் பாவனா. இப்போது கூடைப்பந்தாட்ட வீராங்கனையாக நடிப்பதால் விளையாடி அசத்துகிறார்.

நடிகைன்னா இப்படித்தான் இருக்கணும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil