வக்கிரத்தின் உச்சம்.. மேடையிலேயே அஞ்சலி இடுப்பை தடவிய நடிகர்.. சினிமாவை விட்டே விலக நடிகை முடிவு?
மும்பை: பிரபல ஹரியான்வி நடிகை அஞ்சலி ராகவ், போஜ்புரி நடிகர் பவன் சிங் பொது நிகழ்ச்சியில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதால் போஜ்புரி திரையுலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற "சையா சேவா கரே" பாடல் விளம்பர நிகழ்ச்சியில் பவன் சிங் தனது இடுப்பை தொட்டதாக வெளியான வீடியோ குறித்து அஞ்சலி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
பொதுவெளியில் நடிகைகளுக்கு ரசிகர்கள் போர்வையில் வரும் இளைஞர்களால் ஏகப்பட்ட தொல்லைகள் நடப்பதை பார்த்திருப்போம். ஒரு சில நேரங்களில் அரணாக இருக்க வேண்டிய நடிகர்களே அத்துமீறும் அபாயகரமான செயல்களும் அரங்கேறத்தான் செய்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் சிக்கியிருக்கிறார் போஜ்புரி நடிகை அஞ்சலி ராகவ். தனது இடுப்பை பொதுவெளியில் அதுவும் மேடையில் பேசும் போதே தகாத முறையில் தொட்ட நடிகரை அங்கே கன்னம் வீங்க வைக்காமல் சிரித்துவிட்டு இப்போ வீடியோவில் அழுது புலம்புவது ஏன் என்கிற ட்ரோல்களுக்கும் நடிகை ஆளாகியுள்ளார்.
இடுப்பைத் தடவிய நடிகர்: பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி ராகவின் இடுப்பைக் குறிப்பிட்டு பேசிக்கொண்டே பவன் சிங் அவரது இடுப்பை கிள்ளுவது போலவும், தொட்டு தடவிக் கொண்டே பேச, நடிகை கோபப்படாமல் சிரித்தது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பலரும் அஞ்சலியை கண்டித்து வந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ ஒன்றை அஞ்சலி வெளியிட்டுள்ளார். மேடையில் பவன் சிங் தனது இடுப்பைக் குறிப்பிட்டபோது, ஆடையின் டேக் என்று நினைத்து சிரித்துவிட்டதாக அஞ்சலி விளக்கினார். பின்னர், தனது குழு உறுப்பினர் மூலம் அங்கு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, மிகவும் கோபமடைந்ததாக அவர் கூறினார். சம்மதம் இல்லாமல் யாரையும் தொடுவது தவறு என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரே அசிங்கமா போச்சு: மேடையில் ஏன் உடனே எதிர்வினையாற்றவில்லை என்று பலரும் கேட்டதாக அஞ்சலி தெரிவித்தார். பவன் சிங் நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும், மறுநாள் அவரது வலுவான PR டீம் காரணமாக இந்த விவகாரம் குறித்து பேச வேண்டாம் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், வீடியோ வைரலானதால், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சினிமாவை விட்டு விலக முடிவு: பவன் சிங்கின் இச்செயல் காரணமாக போஜ்புரி திரையுலகில் இருந்து வெளியேறி, இனி ஹரியானா சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தப் போவதாகவும் அஞ்சலி ராகவ் எமோஷனலாகி பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. ஜாலியாக பண்ணுகிறார் பவன் சிங் என்றே நினைத்து அஞ்சலி சிரித்தார் என்றும் விஷயம் பெரிதாக மாறிய நிலையில், இப்போ முதலை கண்ணீர் வடிக்கிறார் என்று கமெண்ட்டுகள் குவிகின்றன. அஞ்சலி ராகவ் ரசிகர்கள், நீங்கள் சினிமாவை விட்டு ஏன் விலக வேண்டும், மேடையில் அசிங்கமாக ஒரு பெண்ணின் அனுமதியே இல்லாமல் அத்துமீறி தொட்ட அவன் தான் திரைத்துறையை விட்டு விலக வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பவன் சிங் என்ன விளக்கம் கொடுக்கவுள்ளார் எனப்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











