ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய முன்னணி நடிகை… குவியும் பாராட்டு!

சென்னை : நடிகை நிதி அகர்வால் தனது 28வது பிறந்தநாளை நேற்று ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடினார்.

ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார்.

இணையத்தில் தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

திரைப்பயணத்தை தொடங்கினார்

திரைப்பயணத்தை தொடங்கினார்

பெங்களுரில் பிறந்து வளர்ந்த நிதிஅகர்வால், இந்தி பேசும் மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர்.இவர் 2017ம் ஆண்டு முன்னா மைகேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, சவ்யாசாசி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து, ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.

சிம்புவுடன்

சிம்புவுடன்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற பெற்ற மாங்கல்யம் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஜெயம்ரவிக்கு ஜோடியாக

ஜெயம்ரவிக்கு ஜோடியாக

இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. ஜெயம் ரவியின் 25வது திரைப்படமான இப்படத்தில் நிதி அகர்வால் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

National Crush

National Crush

இந்நிலையில் நேற்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடிய நிதி அகர்வாலை அவரது ரசிகர்கள், National Crush என்று பட்டம் சூட்டி அழைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். அதுபோக நேஷனல் நிதி என்ற ஹேஸ்டேக் ஐயும் போட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

ராஷ்மிகா பிரபலமானார்

ராஷ்மிகா பிரபலமானார்

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு மந்தனா. 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

Recommended Video

2020 HEROINES MALDIVES TOURS | REWIND RAJA EP-32 | FILMIBEAT TAMIL
முன்னணி ஹீரோயினாக

முன்னணி ஹீரோயினாக

தெலுங்கை போல இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் கூடினர். 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் மந்தனா க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது. அதிலும், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. அவர் பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

ராஷ்மிகா சோகம்

ராஷ்மிகா சோகம்

தற்போது நிதி அகர்வாலுக்கு National Crush பட்டத்தை அவரது ரசிகர்கள் அளித்திருப்பதால், இந்த பட்டத்திற்கு இத்தனை நாள் சொந்தம் கொண்டாடி வந்த நடிகை ராஷ்மிகா சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்மிகாவிற்கு இணையாக நிதி அகர்வாலுக்கும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதரவற்றோர் இல்லத்தில்

ஆதரவற்றோர் இல்லத்தில்

இதனையொட்டி, ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற நடிகை நிதி அகர்வால், ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினுடன்

உதயநிதி ஸ்டாலினுடன்

நிதிஅகர்வால் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் ஹரி ஹர வீர மல்லு (Hari Hara Veera Mallu) என்ற தெலுங்கு படத்திலும், ஹீரோ (Hero) என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X