»   »  பூமிகாவுக்கு கல்யாணம்

பூமிகாவுக்கு கல்யாணம்

Subscribe to Oneindia Tamil


தமிழிலும், தெலுங்கிலும் கலக்கி இப்போது பாலிவுட்டிலும் அலை பரப்பி வரும் பூமிகாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. ஒரு காலத்தில் அமோகாவுடன் அலை மோதிக் கொண்டிருந்த யோகா மாஸ்டர் பரத் தாக்கூர்தான், பூமிகாவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்.

Click here for more images

பூமிகா, பரத் தாக்கூர் திருமணம் மும்பையில், அக்டோபர் 25ம் தேதி நடைபெறவுள்ளது.

பூமிகா சாவ்லா என்ற இயற் பெயரைக் கொண்ட பூமிகா, ரோஜாக்கூட்டம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். அதன் பின்னர் பத்ரி, சில்லுனு ஒரு காதல் என சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இந்தியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் கைவசம் சில படங்கள் உள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளாக யோகா மாஸ்டரான பரத் தாக்கூரை காதலித்து வந்தார் பூமிகா. இதுகுறித்து பலமுறை வதந்திகள், கிசுகிசுக்கள் வந்தபோதும் கூட அதுகுறித்துப் பதில் அளிக்காமல் இருந்து வந்தார் பூமிகா.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தனது காதலையும், கல்யாணத்தையும் உறுதி செய்து அறிவித்தார் பூமிகா. இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், பரத் தாக்கூரும் காதலிப்பது உண்மைதான். விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம். பத்திரிக்கையாளர்களிடம் இதுகுறித்து விரிவாக தெரிவிப்பேன் என்றார் பூமிகா.

இந்த நிலையில் அவர்களது கல்யாண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 25ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பூமிகா, பரத் தாக்கூர் திருமணம் நடைபெறவுள்ளது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளவுள்ளனராம்.

பரத் தாக்கூர் முன்பு நிஷா கோத்தாரியை (அவர்தான் அமோகா) காதலித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென பரத்தை விட்டு விட்டுப் பறந்து விட்டார் அமோகா. இந்த நிலையில்தான் பூமிகாவுக்குத் தாவினார் பரத். இப்போது கல்யாணத்தில் வந்து அது முடியவுள்ளது.

Read more about: bharath, bhoomika, weds
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil