»   »  அரசியல் தலைவி புவனேஸ்வரி!

அரசியல் தலைவி புவனேஸ்வரி!

Subscribe to Oneindia Tamil

டிவி தொடர்களோடு தெலுங்குத் திரையுலகில் பிஸியாகத் தான் இருக்கிறார் காந்தக் கண்ணழகி(!!) புவனேஸ்வரி.

விபச்சாரம் தொடர்பான கோர்ட், கேஸ் என்று ஒரு பக்கம் அலைந்தபோதும் அடிக்கடி ஹைதராபாத் பக்கம் போய் தன் முறுக்கிவிட்டவடிவழகை காட்டிவிட்டு, தெலுங்கில் மாட்லாடிவிட்டு வருகிறார்.

தமிழில் பாய்ஸ் படத்தில் கிடைத்த நல்ல ரோலுக்குப் பின் சொல்லிக் கொள்ளும்படி ஏதும் சான்ஸ் இல்லாமல் இருந்த புவன்ஸ்சுக்குஇப்போது வீரண்ணா என்ற படத்தில் பெரிய கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஹீரோ நெப்போலியன். படத்தில் ஒரு அரசியல் தலைவியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக குரல் கொடுக்கும்கேரக்டராம் நெப்ஸ்சுக்கு.

அந்த ஆணவம் பிடித்த அரசியல் தலைவியின் ரோவில் நடிக்கப் போவது சாட்சாத் புவனேஸ்வரி தான்.

ஜிடிஎன் விஷன் இன்டர்நேசனல் என்ற பெயரில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு தமிழர்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். படத்தைஇயக்குவது கலாநிதி. கதாநாயகியாக சிவகாமி என்ற புதுமுகம் நடிக்க, ராஜஸ்ரீ, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதில் புவனேஸ்வரிக்கு கிட்டதட்ட ரம்யா கிருஷ்ணன் செய்த படையப்பா கேரக்டர் மாதிரி ஒரு ரோலாம். படம் பூராவும் தெலுங்கு தேசம்கட்சி மாதிரி மஞ்சள் சேலையில் வரப் போகிறாராம்.


சினிமாவில் அரசியல்வாதியாக நடிக்கப் போகும் புவனேஸ்வரிக்கு நிஜத்திலும் அரசியல் ஆர்வம் அதிகம். ஆந்திர சினிமாவில்தனக்கிருக்கும் கிரேஸ்ை பயன்படுத்தி அப்படியே தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்துவிடும் திட்டத்தில் புவனேஸ்வரி இருந்தார். ஆனால்,விபச்சார வழக்கில் சிக்கியதால் கனவு சின்னாபின்னாவாகிவிட்டது.

அவரிடம் பேசியதில் இருந்து...

ஒரு பெண் வாழ்வில் சந்திக்கக் கூடாத பிரச்சனைகளை எல்லாம் சந்தித்துவிட்டேன். இப்போ தான் கேஸ் எல்லாம் முடிஞ்சு நிம்மதியாகஇருக்கிறேன்.

தமிழை விட தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் இப்போது தான் சில வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன. என் சொந்தபிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்றார்.

கலைச்சேவையோடு அரசியல் சேவை செய்யும் உங்கள் திட்டம் என்னாச்சு என்று கேட்டபோது,

இனி மேல் தான் அரசியலில் நுழைவது குறித்தெல்லாம் முடிவு செய்யனும். தெலுங்கு தேசத்தில் சேர இருந்தபோது தான் என் வாழ்வில்நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துவிட்டது. ஆனால், அரசியலுக்கு வருவேன். அது ஆந்திராவிலா அல்லது தமிழகத்திலா என்று பின்னர்முடிவு செய்வேன் என்றார் அதிரடியாய்.

கதாநாயாகியாக நடிக்கும் ஆசையே எனக்கில்லை என்று ஒரு அடிசனல் தகவலையும் சொன்னார் புவனேஸ்வரி. தொடர்ந்து வில்லியாகநடிக்கவே ஆசையாம்.

நிஜத்திலும் நீங்கள் வில்லியா என்று கேட்க வாய் வந்தது, மனசு வரவில்லை.. அதனால் விட்டோம் ஜூட்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil