அர்ச்சனா - அருண் நிச்சயதார்த்தம்..குவியும் வாழ்த்து.. எப்போது திருமணம் தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்ற அருண் பிரசாத்துக்கும், அவரது காதலியும் சீரியல் நடிகையுமான அர்ச்சனாவிற்கும் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. அந்த போட்டோவை அருண் பிரசாத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் வீஜேவாக இருந்த அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி சீசன் 2வில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றார். வீட்டிற்குள் சென்றதுமே, பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Archana Ravichandran Arun Prasad engagement
Photo Credit:

சீரியல் நடிகை அர்ச்சனா: இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கார்டு போட்டியாளராக வந்த எவரும் டைட்டிலை பெறாத நிலையில் முதன்முதலாக அர்ச்சனா டைட்டிலை வென்றார். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருணும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக செய்தி உலாவி வந்திருந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் அருண் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு காரணம் அர்ச்சனா தான் என்ற செய்தி பரவியது.

காதல் கிசுகிசு : ஆனால், இந்த காதல் கிசுகிசு வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், அர்ச்சனாவின் பிறந்த நாள் அன்று, பிக் பாஸ் வீட்டில் இருந்தஅருண், கேமிரா முன் நின்று அவரக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தார். இதையடுத்து, அருண் பிரசாத்தை பார்க்க, அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அருணுக்கு அறிவுகரை கூறிவிட்டு, யார் என்ன சொன்னாலும், நீ என் ஹீரோதான் என்று கூறி காதலை உறுதி செய்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் ஜோடியாக பல இடத்தில் சென்ற சுற்றியதை பார்க்க முடிந்தது.

விரைவில் திருமணம்: அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டாலும், திருமணம் எப்போது என்பது பற்றி இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தனர். தற்போது, இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் அர்ச்சனா - அருண் சேர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து, நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் திருமணத்தில் இணைய உள்ள காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X