பச்சை பச்சையாய் தொங்கவிட்ட ஜூலி.. ஆடி ஸ்பெஷலா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை : மணப்பெண் கோலத்தில் ஜூலியை பார்த்த ரசிகர்கள் வகைவகையாக வர்ணித்து வருகின்றனர்.
எங்க வீட்டு குத்து விளக்கு நீ கெடைச்சா வாழ்க்கை கெத்து என்று கியூட் புரோபோசல் களை பறக்க விட்டு வருகின்றனர். .
பச்சை வண்ண சேலையில் எல்லாம் பச்சை பச்சையாக தெரிகிறது என ரசிகர்கள் கலாய்க்கவும் தவறவில்லை.

ஜூலி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான ஜூலியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. இவர் தற்போது மாடலிங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரைக்கும் செவிலியராக இருந்தவர் .இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சூப்பர் மாடல் ஆக மாறிவிட்டார்.

ஜோடிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 4 சீசன் களை கடந்துவிட்டாலும் இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட கண்டஸ்டாண்டுகள் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டனர். முதல் சீசனுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்துவந்தது. அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விடவில்லை .அதிலும் ஜூலி ரொம்பவே ஸ்பெஷல் தான் .

இன்ஸ்டாவில் ஆக்டிவ்
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத் தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனால் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ரசிகர்களைப் போலவே இவருக்கு நெட்டிசன்கள் அதிகமாக இருந்தாலும் இதுவரை இவருக்கு நெகட்டிவ் கமெண்ட் போடும் நெட்டிசன்கள் அதிகமாகக் இருந்து வந்தனர் .

கவலையே இல்லை
ஆனால் தற்போது அவர்கள் குறைந்து வருகின்றனர் .காரணம் அவர்கள் என்னதான் இவரைக் கலாய்த்தாலும் அவர் கண்டுகொள்ளவில்லை .தன்னுடைய வேலையில் கவனமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்களுக்கே போரடித்து விட்டது .அதனால் அவர்கள் அவருடைய வேலையை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.
Recommended Video

அதிக நெகட்டிவ்
எப்போதுமே ஜூலி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டால் அதற்கு 80 சதவீதத்திற்கும் மேல் நெகட்டிவ் கமெண்டுகள் தான் வரும். ஆனால் தற்போது சில காலங்களாக இவர்கள் அதிகமாக குறைந்து விட்டனர். 100 கமெண்டுகளில் 10 கமெண்டுகள் கூட அவரை திட்டும் கமெண்டுகள் இல்லை. அதனால் அவரும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். தன்னைப்பற்றி குறை கூறுபவர்களை கவலைப்படாமல் தனக்கு ஆதரவு தரும் ரசிகர்களைப் பற்றி மட்டுமே இவர் சிந்தனையில் வைத்திருக்கிறாராம்.

கொஞ்சல்ஸ்
தற்போது புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் புதுவித போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து இருக்கிறார் . அதில் இவருக்கு பின்னாடி மயில் தொகையை வைத்துக் கொண்டு வண்ணமயிலாக அமர்ந்திருக்கும் அழகை பார்த்து இவருடைய ரசிகர்கள் இவரை கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதிலும் பலர் இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா தூக்கிட்டு போயிரலாமே என்று க்யூட் ப்ரோபோசல் அனுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











