என்ன இதெல்லாம்..மார்க்கெட்டை பிடிக்க இப்படி பண்ணலாமா.. லாஸ்லியாவால் ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!
சென்னை : படவாய்ப்பு கிடைக்காததால் நடிகை லாஸ்லியா கவர்ச்சி ரூட்டுக்கு மாறி விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறாத்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்.

லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற இவர் அழகில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகச் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இவருக்கு ஆதரவை அளித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, முகின் ராவ், தர்ஷன் என ஆண் நண்பர்களுடன் இயல்பாக பழகினார்.

காதல் கிசுகிசு
அதுமட்டுமில்லாமல், கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா அவரை,கண்டபடி திட்டிதீர்த்தார். இதையடுத்து, கவின் அந்த நிகழ்ச்சியிலிருந்து 5 லட்சத்துடன் வெளியேறினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது இடத்தில் சந்தித்து கொள்ளவே இல்லை.

அடுத்த படங்களில்
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த தர்ஷனுடன் இணைந்து நடித்தார் இந்த படமும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. தற்போது இயக்குனர் எஸ் சத்தியமூர்த்தியின் பெயரிடப்படாத படத்தின் லாஸ்லியா கமிட்டாகி உள்ளார்.

என்ன இதெல்லாம்
அடுத்தடுத்து நடித்த இரண்டு படமும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லாததால், படவாய்ப்பு இல்லாமல் லாஸ்லியா தவித்து வருகிறார். இதனால், படவாய்ப்பை பெற கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது இவர் தனது அழகை வெளிச்சம் போட்டு காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், மார்க்கெட்டை பிடிக்க இப்படி பண்ணலாமா.. லாஸ்லியாவால் என கேட்டு ஃபீல் எம்மோஜிகளை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











