மேலாடையின்றி பூக்களால் மறைத்த படி போஸ்.. சன்னி லியோனை மிஞ்சிய பிக் பாஸ் பிரபலம்
சென்னை: ரசிகர்களின் பேராதரவை பெற்ற விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் திருநங்கை போட்டியாளராக களமிறங்கினார் நமீதா மாரிமுத்து. பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான 'மிஸ் இண்டர்நேஷனல் குயின் 2022' போட்டியில் கலந்து கொண்டு 'மோஸ்ட் பாப்புலர் வோட்' என்ற விருதினை பெற்றார் நமீதா மாரிமுத்து.திருநங்கைகளுக்கான அழகி போட்டி பலவற்றில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளார். இவர் மாடல் அழகியாக மட்டுமில்லாமல், ஒரு சில படங்களிலும் நடித்தும் உள்ளார். சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் இவர் நடித்தது மட்டுமில்லாமல் பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

நமீதா மாரிமுத்து: இப்படி பிரபலமான நடிகை நமீதா மாரிமத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், கடந்து வந்த பாதையில் நமீதா பேசியது பலரை கண்ணீர் விடவைத்தது. திருநங்கையாக மாறியதால், வீட்டில் இருந்து விரட்டப்பட்டது, இந்த சமூதாயத்தில் சந்தித்த அவமானம், வலியென அனைத்தையும் கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். அவர் பேசியதை 20 நிமிடங்கள் கட் எதுவும் செய்யாமல் அப்படியே விஜய் டிவி ஒளிபரப்பியதால் ஓவர் நைட்டில் மக்கள் மத்தியில் நமீதா மாரிமுத்து இடம்பிடித்தார்.
திடீரென வெளியேறினார்: இதனால், அந்த சீசனின் டைட்டில் வின்னர் நமீதா மாரிமுத்தாகத்தான் இருக்கும் என்றும், அவரை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், நமீதா மாரிமுத்து அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் ஏன் வெளியேறினார்... எதற்காக வெளியேறினார் என எந்த காரணத்தையும் சொல்லாமல் சில தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து வெளியேறினார் என்று பிக் பாஸ் வாய்ஸ் மட்டுமே வந்தது. ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், வெளியேறியதாகவும், தாமரை செல்வியுடன் நடந்த சண்டையால் வெளியேறியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அது பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலாடை இல்லாமல்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியே வந்த நமீதா மாரிமுத்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார். தற்போது, அதீத கவர்ச்சி உடையில், அதாவது, நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் மட்டும் போட்டுக்கொண்டு, மேலாடை எதுவும் போடாமல், தனது மார்பகத்தை கையில் இருக்கும் மலர்களை கொண்டு மறைத்துள்ளார். அந்த போட்டோ பார்த்த இணையவாசிகள் சிலர் விவகாரமாக இருக்கிறது என்றும், சிலர் சூப்பர் என்றும் கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











