அச்சச்சோ.. பிக்பாஸ் பிரபலத்துக்கு என்ன ஆச்சு.. கைதாங்கலாக கூட்டிச் செல்லும் கணவர்!
சென்னை: சின்னத்திரை பிரபலம் ஸ்ருதிகா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோக்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. கடந்த வருடம் இந்தி பிக்பாஸில் கலந்து கொண்டு, ஒரு கலக்கு கலக்கிய அவர் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரை அவர் கணவர் பார்த்துக் கொள்வதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
அதாவது, அவர் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவில் அவரது கவணவர் ஸ்ருதிகா அர்ஜுனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அமர வைக்கிறார். அவருக்கு கால்கள் அமுக்கி விடுகிறார். உணவு ஊட்டி விடுகிறார். குளிப்பாட்டி, தலை முடியை உணத்துகிறார். ஸ்ருதிகா உறங்கும் போது, அவருக்கு கால் விரல்களையும் பாதங்களையும் மசாஜ் செய்து விடுகிறார். அதேபோல் ஸ்ருதிகா ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அதே ஷோபாவில் அவரது கணவர் படுத்து தூங்குகிறார். இந்த வீடியோவுக்கு, " அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னைப் பார்த்துக் கொள்வதில் எனது கணவர் மிகவும் அக்கறையாக நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்த மனுஷன் ரொம்பவும் சோர்ந்து விட்டார். இப்போது நான் தான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். கப்பிள்ஸ் கோல்ஸ்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ருதிகா அர்ஜுன் தனது அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பகிர்ந்த வீடியோவும் அதற்கு அவர் இட்ட கேப்ஷனும் பலரது கவனத்தை ஈர்த்தது. அந்த கேப்ஷனில், " ஒரு வருடம். இரண்டு உலகங்கள். நன்றியுணர்வு நிறைந்த ஒரு இதயம். சரியாக ஒரு வருடம் முன்பு, இதே நாளில், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன் - என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றை வாழ்ந்தேன். நான் நினைத்துப் பார்க்காத விதத்தில் என் வலிமை, பொறுமை மற்றும் உணர்ச்சிகளை சோதித்த ஒரு பயணம் பிக் பாஸ் பயணம்.
எமோஷனல் கேப்சன்: இன்று, ஒரு வருடம் கழித்து, நான் முற்றிலும் மாறுபட்ட உலகில் இருக்கிறேன். கேமராக்கள் மற்றும் ஸ்பாட் லைட்கள் என்னைச் சுற்றி இல்லை. ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குணப்படுத்தும் அமைதியான வலிமையால் சூழப்பட்டுள்ளது. ஒரு பெரிய அறுவை சிகிச்சையாக தொடங்கிய இது, மற்றொரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. இந்த அனுபவம் கருணை மற்றும் நம்பிக்கையின் வலிமையை எனக்கு நினைவு படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை: இந்த ரீலை, பிரியா லக்ஷமணன் மருத்துவருக்கு அர்ப்பணிக்கிறேன். அனுபவ கைகளாலும், இரக்கத்தால் நிறைந்த இதயத்தாலும் குணப்படுத்தும் நம்பமுடியாத திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்; மிகவும் எளிமையானவர். அந்த எளிமைக்குப் பின்னால், பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளைச் செய்த ஒரு பெண் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது; நம்பமுடியாத வெற்றி விகிதத்துடன் பெண்கள் தொடர்பான அனைத்து வகையான பிரச்சினைகளையும் அவர் கையாண்டார். எனக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை அவர் அதை மிகவும் எளிதாகச் செய்தார், கடவுளின் சொந்தக் கைகள் அவள் மூலம் செயல்படுவது போல் உணர்ந்தார்.

கடவுளுக்கு நன்றி: ஆனால் என்னை உண்மையிலேயே தொட்டது என்னவென்றால், நான் மட்டும் பராமரிக்கப்படவில்லை. எனது முழு குடும்பமும், என்னைப் பார்க்க வந்த அனைவரும், ஒரே அரவணைப்புடன் கவனிக்கப்பட்டனர். எனது உணவு முதல் அவர்களின் உணவு வரை, அனைத்தும் அன்புடன் கவனித்துக் கொள்ளப்பட்டன. இதனால் ஒருபோதும் ஒரு மருத்துவமனை போல உணரவில்லை, எனக்கு வீடு என்ற உணர்வையே கொடுத்தது. இன்று, அதே கடவுள் எனக்கு மீண்டு வர உதவுகிறார். விரைவில் குணமடைய நம்பிக்கையுடன், வேலைக்குத் திரும்புவதற்கு மட்டுமல்ல, இரட்டிப்பாக கடினமாக உழைத்து ஆழ்ந்த நன்றியுணர்வுடன் வாழவும். எனக்காக மட்டுமல்ல, என் பயணத்திலிருந்து பலத்தைப் பெறும் என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











