பொய்யான போதை பொருள் வழக்கு.. தற்கொலை செய்ய நினைத்தேன்.. மேடையில் கதறி அழுத நடிகை!
சென்னை: நடிகை சஞ்சனா கல்ராணி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். நாயகியாக இவர் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், துணை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான இவர், கோவிட் காலத்தில் திருமணம் செய்து கொண்டு, திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
நடிகை சஞ்சனா கல்ராணி, 'பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9' நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். தெலுங்கு பிக் பாஸ், செப்டம்பர் 5ந் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய உடையான புடவையில் ஜொலித்த சஞ்சனா, ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்பதை விளக்கி பேசிய சஞ்சனா கல்ராணி, போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் அநியாயமாக நான் கைது செய்யப்பட்டேன், அந்த நேரத்தில் தான் சாக வேண்டும் என்று நினைத்தேன். எந்தவிதமான தவறும் செய்யாமல், என் மீது குற்றம் சாட்டப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளால், என் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்காக, மனதளவில் பல வேதனைகளை அனுபவித்தேன்.

நடிகை சஞ்சனா கல்ராணி: வழக்கு என் மீது இருந்த நேரத்தில், அஜீஸ் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டேன், எனது திருமண செய்தியைக்கூட என்னால் மகிழ்ச்சியாக வெளியில் சொல்ல முடியாமல் போனது. ஆனால், அந்த நேரத்தில், என் கணவர் தனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். அவர் தான். இப்போது இந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கும் என்னை அனுப்பி உளளார். இதன் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். சஞ்சனா கல்ராணி, எப்படிப்பட்டவள் என்பதை இந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் நிச்சயம் நிரூபிப்பேன் என்று சஞ்சனா அந்த மேடையில் கண் கலங்கி பேசினார்.
சாக நினைத்தேன்: நடிகை சஞ்சனா கல்ராணி, கொரோனா காலத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டுமத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் சஞ்சனா கல்ராணி இரண்டாவது நபராக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பலமுறை அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்கள் சிறையில் இரு்நத சஞ்சனா. பின் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின் போதை பொருள் வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் சஞ்சனா கல்ராணி நிரபராதி என்று அவரை விடுவித்தது. நடிகை சஞ்சனா கல்ராணி, 'சோககாடு', 'புஜ்ஜிகாடு', 'சத்யமேவ ஜெயதே', 'துஸ்ஸாசன', 'முக்குரு', 'யமஹோ யமா', 'சர்தார் கப்பர் சிங்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்


Click it and Unblock the Notifications











