Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சவுதி அரேபியாவுக்கு ஜாலி ட்ரிப் போன யாஷிகா… யாருடன் ஊர் சுத்துறாங்க தெரியுமா?
சென்னை : சவுதி அரேபியாவுக்கு ஜாலி ட்ரிப் போன யாஷிகா ஆனந்த் அங்கு ஒரு பிரபலத்துடன் ஊர்சுற்றி வருகிறார்.
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் ஜாம்பி, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படத்திலும் நடித்திருந்தார்.
பெஸ்டி,பாம்பாட்டம், ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது,சல்பர் , கடமையை செய் போன்ற திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
என்ன ரொம்ப கிண்டல் பண்ணாங்க.. Relatives - னால ஈஸியா சினிமாவுக்கு வந்துட்டேன்னு!

யாஷிகாஆனந்த்
கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய யாஷிகா எப்போதும் கவர்ச்சி பதுமையாகவே வலம் வருவார்.

விபத்தில் சிக்கினார்
கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட யாஷிகா கிட்டத்தட்ட 3 மாதங்கள் படுத்தப்படுக்கையாக இருந்தார்.

சவுதி அரேபியாவுக்கு ஜாலி ட்ரிப்
தற்போது முழுமையாக குணமடைந்துள்ள யாஷிகா மீண்டும் ரசிகர்களை இன்ஸ்டாவில் குஷிப்படுத்தி வருகிறார். தற்போது, சவுதி அரேபியாவுக்கு ஜாலி ட்ரிப் போய் உள்ள யாஷிகா ஆனந்த் , அங்கு ஷாந்தினாத் சுல் என்ற யூடியூப் பிரபலத்துடன் ஊர் சுற்றி வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் யாஷிகாவுக்கு எங்கே போனாலும் இதேவேலைதான் என்று பதிவிட்டு வருகின்றனர்.

விரைவில் திருமணம்
ஏப்ரல் 1ந்தேதி எனக்கு திருமணம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள். இது செட்டில் ஆக வேண்டிய நேரம். நான் சினிமாவை காதலிக்கிறேன். என்ன ஆனாலும் உங்களை எண்டெர்டெயின் செய்வேன் என்று கூறியிருந்தார். ஆனால்,மாப்பிள்ளை குறித்த எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.