»   »  திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்

திருமணமான ஹீரோவுடன் காதல்: நடிகையை மிரட்டிய பெரும்புள்ளிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரித்திக் ரோஷன் பற்றி ஏதாவது பேசினால் நீ காலி என்று பாலிவுட்டின் பெரும்புள்ளிகள் தன்னை மிரட்டியதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ரித்திக் ரோஷனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையே ரித்திக்கிற்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து நடந்தது.

அதன் பிறகு ரித்திக், கங்கனா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து ஒருவரைப் பற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மிரட்டல்

மிரட்டல்

ரித்திக் ரோஷன் பற்றி வாயை திறந்து ஏதாவது கூறினால் நீ காலி(சினிமா வாழ்க்கை) என்று பாலிவுட் பெரியாட்கள் என்னை வீட்டுக்கு அழைத்து மிரட்டினார்கள் என்கிறார் கங்கனா.

முடிந்தது

முடிந்தது

பெரியாட்களின் மிரட்டல் எதுவும் வேலை செய்யவில்லை. எப்படி இருந்தாலும் அந்த விஷயம் முடிந்து போன ஒன்றாகிவிட்டது. அந்த விஷயம் இன்றைய தேதிக்கு ஒன்னுமில்லாததாகிவிட்டது என கங்கனா தெரிவித்துள்ளார்.

பயம்

பயம்

என் வாழ்வில் அப்படியும் ஒரு தருணம். ஆனால் அதை நினைத்து நான் பயப்படவில்லை. ஏனென்றால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று எனக்கு தெரியும் என்ரு கங்கனா கூறியுள்ளார்.

காதல்

காதல்

க்ரிஷ் 3 படத்தில் சேர்ந்து நடித்தபோது ரித்திக்கிற்கும், கங்கனாவும் காதலித்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் பரம எதிரிகளாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

English summary
Kangana Ranaut says that her much publicised battle with Hrithik Roshan over their alleged love affair, is a thing of the past now and that the chapter is “done and dusted” for her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil