இணையத்தில் தீயாய் பரவும் பிந்து மாதவியின் கிளாமர் ஃபோட்டோஸ்

சென்னை : கோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவர் பிந்து மாதவி. இவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஒரு கன்னியும் மூன்று களவாணியும், பசங்க 2, கழுகு 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Bindu Madhavis latest glam pics fires up the internet

தற்போது கதாநாயகியை மையப்படுத்திய கதையான யாவருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் பிந்து. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் தர்ஷனா பானிக்கும் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய் என்ற மற்றொரு படத்திலும் பிந்து மாதவி நடிக்க உள்ளார்.

சசிக்குமார், வாணி போஜன் நடிக்கும் இந்த படத்தில் பிந்து மாதவி மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க உள்ளாராம். பிந்து மாதவி கையில் துப்பாக்கியுடன் நிற்கும், பகைவனுக்கு அருள்வாய் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பிந்து மாதவி, ஜுன் 14 அன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்களும், நண்பர்களும் பிந்து மாதவிக்கு வாழ்த்து கூறினர். அதுவும் பிந்துவின் பல ஃபோட்டோ போஸ்ட்களை குறிப்பிட்டு அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் பிந்து மாதவி. அதில் அல்ட்ரா மாடர்ன் கிளாமரில் காட்சி தரும் பிந்து மாதவியின் ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கலர்ஃபுல்லாக, கண்ணை கவரும் விதமாக அமைந்துள்ள பிந்து மாதவியின் ஃபோட்டோக்களை ரசிகர்கள் கொண்டாடி, வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X