»   »  அப்படியே என் புருசனுக்கு ஒரு சான்ஸ்: தயாரிப்பாளர்களிடம் கேட்கும் நடிகை

அப்படியே என் புருசனுக்கு ஒரு சான்ஸ்: தயாரிப்பாளர்களிடம் கேட்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு மார்க்கெட் இல்லை என்பது தான் உண்மை. அவர் கையில் புதுப்படங்கள் இல்லை. கடை திறப்பு விழா, கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

பிபாஷாவின் கணவரும், நடிகருமான கரண் சிங் குரோவருக்கும் மார்க்கெட் இல்லை.

பிபாஷா

பிபாஷா

பிபாஷா தன்னை தேடி வரும் கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி வாய்ப்புகளை ஏற்கும்போது தனது கணவருக்கும் ஒரு சான்ஸ் கொடுக்குமாறு கேட்டு வருகிறாராம்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பர பட வாய்ப்பு வந்தால் இது தம்பதிகள் வரும் விளம்பரமா, அப்படி என்றால் என் கணவரையே நடிக்க வைக்கலாமே என்று தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம்.

வெளிநாட்டு

வெளிநாட்டு

வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு பிபாஷாவை அழைத்தால் என்னுடன் என் கணவரும் வருவார். அவரின் விமான செலவு, ஹோட்டல் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும் என்கிறாராம்.

முகம் சுளிப்பு

முகம் சுளிப்பு

பிபாஷா கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்பது பலருக்கு பிடிக்கவில்லையாம். இந்த அம்மாவுக்கு பதில் வேறு எந்த நடிகையாவது அழைக்கலாம் என்று கடுப்பாகிறார்களாம்.

English summary
Bollywood actress Bipasha Basu is asking to include her husband in the package deal for cultural shows, events and endorsements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil