»   »  அலைபாய்ந்த கூந்தலை அடக்கி.. வெட்டிய கூந்தலுடன் "க்யூட்"டாக காட்சி தரும் பிபாஷா பாசு!

அலைபாய்ந்த கூந்தலை அடக்கி.. வெட்டிய கூந்தலுடன் "க்யூட்"டாக காட்சி தரும் பிபாஷா பாசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திருமணத்திற்குப் பிறகு சிறிதாக வெட்டிய கூந்தலுடன் புதிய ஹேர் ஸ்டைலில் காட்சி தருகிறார் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு.

37 வயதாகும் நடிகை பிபாஷா பாசு, கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடிகர் கரண் சிங் க்ரோவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக மாலத்தீவு சென்று திரும்பினர்.

Bipasha Basu debuted her new short hairdo on Instagram

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிபாஷா பாசு. அதில், தனது நீண்ட கூந்தலை வெட்டி விட்டு, சிறிய கூந்தலுடன் அவர் போஸ் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தான் பாலிவுட் நடிகைகளான கங்கணா ரணாவத்தும், பிரியங்கா சோப்ராவும் இதேபோல், தங்களது கூந்தலைக் குறைத்து பாப் எனப்படும் குறைந்த முடியுடன் கூடிய புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறினர்.

தற்போது அந்தவகையில், பிபாஷாவும் புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ளார். தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிபாஷா கூடவே, ‘எனது நீண்ட கூந்தலை மிஸ் செய்கிறேன். ஆனால், இந்த குறைந்த முடி ஹேர்ஸ்டைலும் எனக்குப் பிடித்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

அது சரி.. ஒன்றை இழந்துதானே இன்னொன்றை பெற முடியும் பாஸ் (சு)!

English summary
Keeping up with the summer trend, the 37-year-old actress Bipasha Basu, who recently tied the knot with TV actor Karan Singh Grover, has opted for a bob

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil