»   »  'அந்த' 4 பேரை மட்டும் திருமணத்திற்கு அழைக்காத நடிகை பிபாஷா பாசு

'அந்த' 4 பேரை மட்டும் திருமணத்திற்கு அழைக்காத நடிகை பிபாஷா பாசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது திருமணத்திற்கு நான்கு பேரை அழைக்கவில்லையாம்.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான நடிகர் கரண் சிங் குரோவரும் வரும் 30ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அவர்களின் திருமணம் மும்பையில் நடக்கிறது.

Bipasha Basu doesn't invite four men for her wedding

திருமண பத்திரிக்கையை பிரமாண்டமாக அடித்துள்ளனர். இந்நிலையில் பிபாஷா பாலிவுட்டை சேர்ந்த நான்கு பேருக்கு பத்திரிக்கை வைக்கவில்லையாம். அந்த நான்கு பேரும் வேறு யாரும் இல்லை பிபாஷாவின் முன்னாள் காதலர்களான தினோ மோரியா, மிலிந்த் சோமன், ஜான் ஆபிரகாம், ஹர்மன் பவேஜா தான்.

Bipasha Basu doesn't invite four men for her wedding

பழையதை மறந்து புது வாழ்க்கை துவங்கும்போது அவர்களை பிபாஷா பார்க்க விரும்பவில்லையாம். கரணும் தனது முன்னாள் மனைவிகளான ஷ்ரத்தா நிகம் மற்றும் ஜெனிபர் விங்கட்டை அழைக்கவில்லையாம்.

அலோன் இந்தி படத்தில் நடிக்கையில் கரணுக்கும், பிபாஷாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Bipasha Basu has not invited her former boyfriends for her wedding with actor Karan Singh Grover.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil