»   »  ஹேர் ஸ்டைலை மாற்றப் போய் முகத்தைக் கருக்கிக் கொண்ட பிபாஷா... அய்யோ பாவம்!

ஹேர் ஸ்டைலை மாற்றப் போய் முகத்தைக் கருக்கிக் கொண்ட பிபாஷா... அய்யோ பாவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது ஹேர்ஸ்டைலி்ஸ்ட்டின் அஜாக்கிரதையால், தன் முகம் மற்றும் கைகளில் தீக்காயம் அடைந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான பிபாசா பாசு.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் பிபாசா பாசு. சமீபத்தில் இவர் தனது முகம் மற்றும் கையில் தீக்காயம் அடைந்ததாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்.

மேலும், இந்த விபத்திற்குக் காரணம் தனது ஹேர்ஸ்டைலிஸ்ட் தான் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எதிர்பாராத விபத்து...

எதிர்பாராத விபத்து...

சம்பவத்தன்று பிபாசாவின் தலைமுடியின் அமைப்பை கருவியின் துணை கொண்டு மாற்றியுள்ளார் அவரது ஹேர் ஸ்டைலிஸ்ட். அப்போது, எதிர்பாராத விதமாக சூடான அந்தக் கருவி பிபாசாவின் முகம் மற்றும் கையில் பட்டு தீக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோவுடன்...

போட்டோவுடன்...

முதலில் இந்த சம்பவத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்த பிபாசா, பின்னர் சிறிதுநேரத்தை அதை நீக்கி விட்டார்.

புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்...

புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்...

தற்போது அவர் தனது பழைய ஹேர்ஸ்டைலிஸ்டை மாற்றி விட்டு, புதிதாக ஒருவரை நியமித்துள்ளார். புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட் தனது முடிக்கு சாயம் பூசுவது போன்ற புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

கண்ணாடி உதவியுடன்...

கண்ணாடி உதவியுடன்...

அதில், முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு தன் முகத்தை மூடியபடி தோன்றுகிறார் பிபாசா. மேலும், இதன் மூலம் தனது முகத்தை தீக்காயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேவதைக்கு காயம்...

தேவதைக்கு காயம்...

படப்பிடிப்பு தளங்களில் விபத்துகள் ஏற்படுவது சகஜமான விஷயம் தான் என்றாலும், இம்முறை பிரபல நடிகைக்கு தீக்காயம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Accidents happen on the sets of Bollywood films. That's not new. But this time, it wasn't accident. It was negligence. Bipasha Basu faced burns on her face and wrist, courtesy her hair stylist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil