»   »  லெஸ்பியன்களை கண்டால் தெறிச்சு ஓடிடுவேன்: பேட்டி அளித்த பிபாஷாவை திட்டும் மக்கள்

லெஸ்பியன்களை கண்டால் தெறிச்சு ஓடிடுவேன்: பேட்டி அளித்த பிபாஷாவை திட்டும் மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களை பார்த்தாலே அலர்ஜி என்று கூறிய நடிகை பிபாஷா பாசுவை மக்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்துள்ளனர்.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு ஸ்டார்டஸ்ட் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களை சந்தித்தது உண்டா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பலரை கோபம் அடைய வைத்துள்ளது.

பேட்டியின்போது பிபாஷா கூறுகையில்,

லெஸ்பியன்

லெஸ்பியன்

லெஸ்பியனை என் வாழ்வில் சந்தித்துள்ளேன். ஒரு காதலர் தினத்தன்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஒரு பெண் எனக்கு வைர நெக்லஸ் பரசளித்தார். அவர் என் மீது காதல் கொண்டார்.

அழுகை

அழுகை

லெஸ்பியன் ஒருவர் எனக்கு பரிசளித்ததை நினைத்து நான் பயந்துவிட்டேன். அவர் என்னை விரும்புகிறார் என்பதை அறிந்து பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டேன்.

தள்ளிவிடுவேன்

தள்ளிவிடுவேன்

தற்போது கூட பார்ட்டிகளில் அத்தகைய பெண்கள் எனக்கு மிக அருகே வந்தால் அவர்களை தள்ளிவிட்டு ஓடிவிடுவேன். லெஸ்பியன்களை பார்த்தாலே எனக்கு பயம் என்றார் பிபாஷா.

ட்விட்டர்

லெஸ்பியனைக் கண்டால் பயந்து ஓடுகிறேன் என்று பிபாஷா கூறியதை கேட்டு பலர் அவரை ட்விட்டரில் திட்டியுள்ளனர். பிபாஷா பாசு லெஸ்பியன்களை பார்த்து அஞ்சுகிறாரா? ஏன்? அவர்களில் ஒருவர் அவருக்கு நல்ல கதை அளித்துவிடுவார் என்றா? என ரோஹன் ட்வீட் செய்துள்ளார். இது போன்று பலர் பிபாஷாவை திட்டியுள்ளனர்.

English summary
Twitterattis are scolding Bollywood actress Bipasha Basu for saying that she is scared of lesbians.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil