»   »  பிபாஷாவுக்குப் பிடிக்காத ஹீரோக்கள்!

பிபாஷாவுக்குப் பிடிக்காத ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"கவர்ச்சிப் பிசாசு என்று பாலிவுட்டில் செல்லமாக அழைக்கப்படும் பிபாஷா, சச்சின் மூலம் தமிழிலும் கால் வைத்துள்ளார்.

முதல் படத்திலேயே அவர் பரபரப்பாக பேசப்பட்டார். அவரது சம்பளம் மட்டும் அதற்கு காரணமல்ல, சின்னப் பையன் விஜய்யுடன் நடிக்கும் பிபாஷா, பெரியவர் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்த காரணத்தால்தான்.

அதுகுறித்து பிபாஷாவிடமே கேட்போமே!

கமலுடன் நடிக்க மறுத்தேன் என்று கூற முடியாது. உண்மையில் நான் கமல் சாருடன் முன்பே ஒரு படத்தில் (பஞ்ச தந்திரம்?) நடித்திருக்க வேண்டும். அப்போது எனது கால்ஷீட் ஒத்துவரவில்லை. இதனால் அதில் நடிக்க முடியாமல் போய் விட்டது.

இப்போது "மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் வாய்ப்பு வந்தது. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் கால்ஷீட் பிரச்சினை வந்ததால், நடிக்க முடியாமல் போனது. உண்மையில் இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இதுதான் காரணம், வேறு காரணம் எதுவும் இல்லை.

விஜய்யுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அமைதியாக இருக்கிறார், ஆர்ப்பாட்டமாக ஆடுகிறார், அருமையாக நடிக்கிறார்.

எனக்கு பாலிவுட்டில் சில ஹீரோக்களுடன் நடிக்கப் பிடிக்கவில்லை. அவர்களின் கெட்ட பழக்கங்கள் சில எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பல இந்திப் படங்களை நான் மறுத்திருக்கிறேன்.

அதேபோல, எனது ஹீரோக்கள் யார் என்பதை முடிவு செய்யும் உரிமையும் எனக்கு இருக்கிறது. என்னைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறும் ஹீரோக்கள், எனக்குப் பொருத்தமானவர்களா என்று பார்த்துத்தான் நான் எனது முடிவைத் தெரிவிப்பேன்.

சீரியஸாக போகிறார் என்று பிரேக் போட்டு உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்று டிராக்கை மாற்றினோம்.

என்னைப் பற்றியா? நான் ரொம்ப அழகானவள் என்று எல்லோருமே கூறுகிறார்கள். சமீபத்தில் அமிதாப் பச்சன் கூட எனது அழகைப் புகழ்ந்து தள்ளினார், அத்தோடு எனக்கு நிறைய அறிவும் உள்ளதாக பாராட்டினார்.

அப்ப பிபாஷாவுக்கு தமிழில் அறிவழகி என்று பெயர் வச்சிரலாமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil