வித்யாபாலனை மூட் அவுட் ஆக்கிய கருப்பு பூனை

By Mayura Akilan

Black cat gives Vidya cold feet
கணவருடன் தியேட்டருக்குச் சென்ற வித்யாபாலன் மீது கருப்புப்பூனை பாய்ந்ததால் மூட் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் மும்பையில் தனது உறவினர் ஆதித்ய ராய் தயாரித்த 'ஆஷிகி' என்ற படத்தின் சிறப்பு காட்சிக்கு கணவர் சித்தார்த்துடன் சென்றார். தியேட்டருக்குள் நுழைந்து மற்றவர்களிடம் நலம் விசாரித்தபடி சென்ற அவர் மீது திடீரென ஒரு கருப்பு பூனை பாய்ந்தது. அவரது காலடி அருகே குதித்து ஓடியது. இதைக்கண்டு வித்யாபாலன் அலறினார். அவரது அலறல் சத்தம் அங்கிருந்தவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது.

வித்யாபாலன் தெய்வபக்தி, சடங்கு சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். பூனை குறுக்கே பாய்ந்த சம்பவம் அவரை அப்செட் ஆக்கியது. யாரிடமும் பேசாமல் அங்கிருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். 'பூனை குறுக்கே போனதால் ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா?' என்று கணவரிடம் கேட்டபடி இருந்தார். அப்போது அவரை சித்தார்த் சமாதானப்படுத்தினார். ஆனாலும் சமாதானம் அடையாமலேயே இருந்தார் வித்யாபாலன். படம் பார்க்கும் மூட் இல்லாமல் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார்.

'கஹானி' படத்தில் கணவனை ஊர் முழுவதும் தேடும் தைரியமான கர்ப்பிணி கதாபாத்திரம், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான 'டர்ட்டி பிக்சர்' படத்தில் துணிச்சலான கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் வித்யா பாலன். ஆனால் ஒரு கறுப்புப்பூனை அவரை அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X