For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'பப்ளி' பூஜா பட் படத்திற்கு வரும் 'நீலக்குயில்' எலீனா.....!

  By Sudha
  |

  மும்பை: அடுத்தபடியாக, பாலிவுட்டுக்கு இன்னொரு அழகுக் குயிலை கூட்டி வருகிறார்கள். அவரது பெயர் எலீனா...

  பாலிவுட்டில் ஏற்கனவே உள்ள பல ஹீரோயின்களுக்கு ஒவ்வொரு தனி விசேஷம் இருக்கும்... அந்த வகையில் இந்த எலீனாவுக்கு கண்ணுதான் ஸ்பெஷலாம்...

  அதுவும் எப்படி... சூப்பரான நீலக் கண்கள். இந்தக் கண்களை வைத்து எலீனா என்னமா ஆட்டம் காட்டப் போகிறார் பாருங்கள் என்று பூஜா பட் வட்டாரம் மார் தட்டிச் சொல்கிறது.

  ஐஸ் என்றால் ஐஸ்...

  ஐஸ் என்றால் ஐஸ்...

  ஐஸ்வர்யா ராய் என்றால் பட்டென்று நம் கண்களில் மின்னல் அடிக்க வைப்பது அவரது கண்கள்தான்.

  காத்ரீனா என்றால் க்யூட் புன்னகை....

  காத்ரீனா என்றால் க்யூட் புன்னகை....

  அதேபோல காத்ரீனா கைப் என்றால் அந்த மாஸாவின் கடைசித் துளியை.. ரசித்து லயித்து உள் வாங்குவார் பாருங்கள்.. அப்போது வெளிப்படுமே அவரது அதரங்களில் அந்த அழகான க்யூட்டான புன்னகை.. அதுதான் ஞாபகத்திற்கு வந்து சென்சேஷனாக்கும்.

  கரீனான்னா.. ஃபிட்டு

  கரீனான்னா.. ஃபிட்டு

  அதேபோல கரீனா கபூர் என்றால் அவரது அழகான உடல் அமைப்பு, வாளிப்பான உடல் கட்டு.. பிட்னஸ்.

  பிபாஷான்னா அப்பீல்...

  பிபாஷான்னா அப்பீல்...

  பிபாஷா பாசு என்ற பெயரைக் கேட்டதுமே கிக் வரும்.. காரணம் அவரது செக்ஸியான தோற்றம்..

  தீபிகான்னா கால்...

  தீபிகான்னா கால்...

  கால் அழகுக்குப் பெயர் போனவர் தீபிகா படுகோன்.. நீண்ட, வாழைத் தண்டு போன்ற கால்களுக்கு சொந்தக்காரியானவர் தீபிகா....

  இந்த வரிசையி்ல் எலீனா...

  இந்த வரிசையி்ல் எலீனா...

  இப்போது இந்த வரிசையில் தனித்துவத்துடன் கூடிய அழகியாக பாலிவுட்டில் அரங்கேற்றம் காண்கிறார் எலீனா.

  பூஜா பட்டின் பேட்...

  பூஜா பட்டின் பேட்...

  பூஜா பட் தயாரிக்கும் ரொமான்டிக் படமான பேட் படத்தில் எலீனாதான் நாயகி. இயக்குபவர் பிரவல் ராமன் (ஏன் இப்படி ஒரு பேரு ராசா...)

  எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு அடிச்சு

  எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு அடிச்சு

  இருக்கிற ஹீரோயின்கள் அத்தனை பேரின் திறமைகளையும், ஸ்பெஷல்களையம் சேர்த்து கலக்கி எடுத்தது போல அம்சமாக இருக்கிறாராம் எலீனா..

  கில்லர் லுக்கு... பிளேம்பாயன்ட் பாடி...!

  கில்லர் லுக்கு... பிளேம்பாயன்ட் பாடி...!

  எலீனாவிடம் கில்லர் லுக்கும், பிளேம்பாயன்ட் பாடியும் இருப்பதாக யூனிட்டே சிலாகிக்கிறது. ஆனாலும் அவரது நீல நிறக் கண்கள்தான் முக்கியமான ஹைலைட் என்றும் காது கிட்ட வந்து கிசுகிசுக்கிறார்கள்...

  எலீனா பாலிசி என்னன்னா...

  எலீனா பாலிசி என்னன்னா...

  கடுமையாக உழைக்கோனும்.. பாசிட்டிவ்வாக எதையும் பார்க்கோனும்.. அப்படி இருந்தால் ஈசியா ஜெயிக்கலாம்.. என்பதே எலீனாவின் பாலிசியாம்..

  ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி

  ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி

  ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒரு திறமை.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி.. நான் இப்படி... என்னோட சார்ம் எனக்கே பிடிக்கும்... நிறைய மரியாதை கொடுப்பேன்.. என்னை அத்தனை பேருக்கும் பிடிக்கும்....

  ரொம்ப நேரமா எழுதியதால டயர்டா இருக்கு.. ரெண்டு கோலி சோடா பார்சேல்.....!

  English summary
  Bollywood has been charmed by Aishwarya Rai Bachan light eyes, Katrina Kaif cute smile, Kareena Kapoor flawless complexion, Bipasha Basu sex appeal and Deepika Padukone long legs. These Bollywood stars won billions of hearts all over the globe. And now comes the new blue eyed beauty Elena who will act and romance in Pooja Bhatt next movie “Bad”, directed by Prawal Raman. Elena has all of these legendary beauties qualities in one: gorgeous blue eyes, sweet smile and flawless white complexion. She has the killer looks and flamboyant body but it is her lovely smile that wins your heart.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more