»   »  டாப்லெஸ்... போல்டு போஸ்கள்... பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பும் ராய் லட்சுமி

டாப்லெஸ்... போல்டு போஸ்கள்... பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பும் ராய் லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேயாக நடித்து ரசிகர்களை அச்சுறுத்திய ராய் லட்சுமி, இப்போது டாப்லெஸ்... புத்தக ஆடை என பாலிவுட்டில் பரபரப்பை பற்றவைத்துள்ளார்.

2004ம் ஆண்டில் நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் 'ஜூலி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 'ஜூலி-2' என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் முதன்மை ரோலில் நடிகை லட்சுமி ராய் அலைஸ் ராய் லட்சுமி நடித்துள்ளார்.

இந்த படத்தில்தான் கடற்கரை மணலில் வெறும் புத்தகத்தை மறைத்தபடி படுத்துள்ளார் ராய் லட்சுமி. இது இவரது முதல் பாலிவுட் படமாகும்.

தீபக் சிவதாசினி இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ராய் லட்சுமி, மெல்லிய மேல் ஆடையை கழற்றியபடி பின்புறமாக நின்று போஸ் கொடுத்து பரபரப்பு கிளப்பியுள்ளார் .

ராய் லட்சுமியின் பாலிவுட் பயணம்

ராய் லட்சுமியின் பாலிவுட் பயணம்

அசின், த்ரிஷா, ஷ்ரேயாவை தொடர்ந்து பாலிவுட் பயணமாகிறார் அரண்மனை நடிகை ராய் லட்சுமி. இதற்கு முன் ஓரிரண்டு படங்களில் நடித்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ராய் லட்சுமிக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஜூலி 2

ஜூலி 2

தற்போது 2004ல் வெளிவந்த ஜூலி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் ஜூலி 2 அந்தக் குறையைத் தீர்க்கும் எனத் தெரிகிறது. படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராய் லட்சுமி மட்டுமே நிற்கிறார்.

பாலியல் தொழிலாளி

பாலியல் தொழிலாளி

சூழ்நிலைகளால் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண் மீண்டும் ஒரு குடும்ப வாழ்க்கையில் நுழைகையில் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள் என்பதே முதலில் வந்த ஜூலி படத்தின் கதை. இரண்டாவது படத்தின் கதையும் ஒரு பெண்ணின் சிக்கலான வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் என்றே தெரிகிறது.

டாப்லெஸ் போஸ்

டாப்லெஸ் போஸ்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராய் லட்சுமியின் பின்புற டாப்லெஸ் போஸ் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ராய் லட்சுமியின் முதல்படம் பாலிவுட் படம் இதுவாகும். முதல்படத்திலேயே இவர் போல்ட்டாக நடித்திருப்பது இங்குள்ள நடிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட்டில் வெளியீடு

ஆகஸ்ட்டில் வெளியீடு

தமிழில் சென்ற வருடம் வந்த காஞ்சனா, அரண்மனை படம் ராய் லட்சுமிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. பேய் படத்திலும் நடித்து ரசிகர்களை அச்சுறுத்தினார். தற்போது பாலிவுட்டில் தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜூலி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது . ராய் லட்சுமி , சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி வரும் அகிரா படத்திலும் நடித்து வருகிறார்.

English summary
In the poster rear view of topless girl can be seen who has covered herself with a sheer piece of cloth! The first look is quite bold and going by the poster, looks like Laxmi is all set to scorch the screen!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil