»   »  அடடே, இப்படியும் 2 நடிகைகளா?: வியக்கும் பாலிவுட்

அடடே, இப்படியும் 2 நடிகைகளா?: வியக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்காரர்கள் வியக்கும் அளவுக்கு நடிகைகள் சோனம் கபூரும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

பாலிவுட் நடிகைகள் இருவர் தோழிகளாக இருப்பது மிக மிக கஷ்டம் என்கிறார்கள். முன்னணி நடிகைகள் பலர் ஒருவரைக் கண்டால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கிறார்கள்.

இந்நிலையில் தான் பாலிவுட்டில் இரண்டு நடிகைகள் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

மனதில் உள்ளதை படக் படக்கென்று பேசி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் சோனம் கபூர். அவரது பேச்சாலேயே அவர் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார்.

ஜாக்குலின்

ஜாக்குலின்

இலங்கையில் இருந்து வந்து மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றால் சோனம் கபூருக்கு உயிர். சோனம் என்றால் ஜாக்குலினுக்கு உயிர்.

அடடே

அடடே

சோனமும், ஜாக்குலினும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். சோனம் கபூரின் வீட்டில் எந்த விசேஷமும் ஜாக்குலின் இல்லாமல் நடக்காது. அவர்களின் நட்பை பார்த்து பாலிவுட்டே வியக்கிறது.

விமர்சனம்

விமர்சனம்

எங்கு சென்றாலும் கைகோர்த்து செல்கிறார்கள் சோனமும், ஜாக்குலினும். சோனம் என் சகோதரி போன்றவர். அவரைப் போன்ற ஒருவர் என் வாழ்வில் வந்ததால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

தங்க மனசு

தங்க மனசு

சோனம் கபூருக்கு தங்க மனசு. அவர் அன்பானவர், சிறந்த மனுஷி, எங்கள் இருவரின் வாழ்வில் ஒளிவுமறைவு இல்லை, இருவரின் படங்கள் பற்றியும் பேசிக் கொள்வோம் என்கிறார் ஜாக்குலின்.

English summary
Bollywood is in awe of besties Sonam Kapoor and Jacqueline Fernandez.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil