»   »  'பாலிவுட் இப்போதுதான் மாறிவருகிறது...' - கரீனா கபூர் பெருமிதம்

'பாலிவுட் இப்போதுதான் மாறிவருகிறது...' - கரீனா கபூர் பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாலிவுட் இயக்குநர்கள், பெண்களை இப்போதுதான் முற்போக்குவாதிகளாகச் சித்தரிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

கரீனா கபூர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, 'திரையில் பெண்களின் சித்தரிப்பில் ஒரு மாறுதல் இருப்பது இப்போது கண்கூடாகத் தெரிகிறது. இந்தி சினிமாவில் இப்போது கதாபாத்திரங்களை எழுதுவதும் இளம் இயக்குநர்கள். அவர்களால் கடினமாக உழைத்து வெற்றி கண்டுள்ள பெண் ஆளுமைகளை வெற்றிகரமாகத் திரையில் கொண்டு வர முடிகிறது.'

Bollywood directors portrays women as progressive nowadays

இப்போது திரைப்படங்களில் பெண்களை முற்போக்குவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். இது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகக் கூறியுள்ளார். நவீன இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பலதரப்பட்ட பொறுப்புகளைக் கையாள்வதாகவும், தானும் ஒரு நவீன இந்தியப் பெண்ணாக உணர்வதாகவும் கரீனா கூறியுள்ளார்.

Bollywood directors portrays women as progressive nowadays

'பன்முகத்தன்மை கொண்டவர்களாக நவீன இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள். தங்கள் ஆசைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மணமான, சுதந்திரமான, வேலை செய்யும் பெண்ணாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கர்வத்துடனும், பெருமிதத்துடனும் இதைச் சொல்கிறேன். கல்யாணமானாலும் நான் வேலை செய்கிறேன். எனக்கென ஒரு அடையாளத்தையும் பெற்றுள்ளேன்' என்றார்.

English summary
Kareena Kapoor has said, 'Bollywood directors are now beginning to portray women as progressive.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil