»   »  அசின் முதல் ரவீனா வரை.. தொழிலதிபரேதான் வேணுமா?

அசின் முதல் ரவீனா வரை.. தொழிலதிபரேதான் வேணுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கில் காலூன்றி தமிழில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த அசின், ஹிந்தி கஜினி மூலம் பாலிவுட்டில் பாதம் பதித்து தற்போது மண வாழ்க்கையில் வந்து நிற்கிறார்.

மைக்ரோமெக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை விரைவில் மணம் புரியவிருக்கிறார், பாலிவுட் நடிகைகள் தொழிலதிபர்களை விரும்பி மணம் புரிவது இது முதல் முறையல்ல.

நடிகைகள் ரவீனா டாண்டன் தொடங்கி ஷில்பா ஷெட்டி, வித்யாபாலன் என்று ஏற்கனவே பிரபலமான நடிகைகள் தொலதிபர்களை விரும்பி மணந்து உள்ளனர், தொழிலதிபர்களை விரும்பி மணம் புரிந்த பாலிவுட் நடிகைகள் சிலரைப் பற்றி இங்கு காணலாம்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

பாலிவுட்டின் அழகான நடிகைகளில் ஒருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, அக்சய்குமாருடனான காதல் முறிவிற்குப் பின் வேறு யாருடனும் தொடர்பில் இல்லாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். மீண்டும் ஷில்பா ஷெட்டிக்கு லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுடன் காதல் மலர்ந்தது, 2009 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்த இந்த காதலுக்கு சாட்சியாக இருவருக்கும் வியான் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

ஜுஹி சாவ்லா

ஜுஹி சாவ்லா

எஸ் பாஸ் நடிகையான ஜுஹி சாவ்லா 1995 ம் ஆண்டு தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது தொழிலதிபர் ஜெய் மேக்தாவை விரும்பி மணந்து கொண்டார், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

வித்யாபாலன்

வித்யாபாலன்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்த போது தொழிலதிபர் சித்தார்த் ராய் கபூரை(UTV Motion Pictures CEO) 2012 ம் ஆண்டு சத்தமில்லாமல் மணந்து கொண்டார் வித்யாபாலன். பாலிவுட்டின் இயக்குனரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான கரண் ஜோகரின் இல்ல விழாவில் சந்தித்துக் கொண்ட இருவரும், அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலில் விழுந்து மணம் புரிந்து கொண்டனர்.

அம்ரிதா அரோரா

அம்ரிதா அரோரா

பாலிவுட்டின் திரை வாழ்க்கையில் பெரிய உயரத்தைத் தொடவில்லை என்றாலும் கூட சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது அம்ரிதாவிற்கு. தொழிலதிபர் ஷகீல் லடாக்கை 2009 ல் மணம் புரிந்த அம்ரிதா தற்போது 2 குழந்தைகளிற்கு தாயாகி விட்டார்.

சோனாலி பிந்த்ரே

சோனாலி பிந்த்ரே

பாலிவுட்டின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த காலத்தில் இயக்குநர் கோல்டி பெல்லை 2001 ம் ஆண்டில் மணந்து கொண்டார் சோனாலி பிந்த்ரே (காதலர் தினம் படத்தில் ரோஜாவாக வருவார்).

ரவீனா டாண்டன்

ரவீனா டாண்டன்

ரவீனா - அக்சய் குமார் இருவருக்குமிடையே இருந்த காதலை உலகமே அறியும் ஆனால் மிகவும் மோசமாக இருவரது காதலும் முறிந்து போனது, இதனைத் தொடர்ந்து 2004 ம் ஆண்டில் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான விநியோகஸ்தரான அணில் தாதனியை விரும்பி மணந்து கொண்டார் ரவீனா, இவர்கள் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக 4 குழந்தைகள் உள்ளனர்.

English summary
Actress Asin is set to marry Micromax co-founder Rahul Sharma soon. This is not the first time that Bollywood, From Shilpa Shetty to Sonali Bendre, many tinsel town ladies tied the knot with popular businessmen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil