twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாய்ப்புக் கொடுக்காமல் தன்னை நிராகரித்த ஏ-லிஸ்ட் ஹீரோக்கள்..வெளிப்படையாகச் சொன்ன பிரபல ஹீரோயின்!

    By
    |

    மும்பை: டாப் ஹீரோக்கள் தன்னை நிராகரித்ததாக பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Roja Andhara Style Chicken Pickle | Homemade Recipe | Lock down Diaries

    பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான், நடித்த பரினீதா என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர்.

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன் மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், கோபத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த வித்யாபாலன், மலையாள படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில், சமீபத்தில் என்.டி.ஆர்.பயோபிக்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில், அஜித் ஜோடியாக, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

    சகுந்தலா தேவி

    சகுந்தலா தேவி

    இப்போது உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையில் நடித்து வருகிறார். இந்தியில் பல சிறந்த படங்களில் நடித்திருந்தாலும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை. ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான், ஹிர்த்திக் ரோஷன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்ததில்லை.

    ஏ லிஸ்ட் நடிகர்கள்

    ஏ லிஸ்ட் நடிகர்கள்

    சல்மான் கான், அக்‌ஷய் குமார் படங்களில் வித்யா நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் கேட்டபோது, ஏ லிஸ்ட் நடிகர்கள் படத்தில் நடிக்க வைக்க, என்னை யாரும் யோசிக்கவில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். அவர்களால் ஓரங்கட்டப்படுவதாக, நிராகரிக்கப்படுவதாக நினைத்தேன். ஆனால், அதற்காக வருத்தப்படவில்லை.

    மிஷன் மங்கள்

    மிஷன் மங்கள்

    நான் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க முடிவு செய்தேன். சினிமாவுக்கு அதுதான் ஆத்மா. அதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன். அந்தப் படங்கள் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன என்று கூறியுள்ளார் வித்யாபாலன். அக்‌ஷய் குமாருடன் மிஷன் மங்கள் படத்தில் நடித்திருந்தார் வித்யாபாலன்.

    English summary
    Vidya Balan felt she was being shunned from mainstream films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X