"கனா காண்கிறேன்.. கனா காண்கிறேன்.. கண்ணாளனே” பாட்டுல ஆடுன ருக்மணி.. இப்போ இந்த பிசினஸ் பண்றாங்களா?

சென்னை: மதராஸி ருக்மணி வசந்துக்கு முன்னதாகவே பல வருடங்களுக்கு முன்பாக பொம்மலாட்டம் படத்திலேயே ருக்மணி நடிகை தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். தமன்னா நடித்த ஆனந்த தாண்டவம் படத்தில் அவருக்குப் போட்டியாக நடித்தும் நடனமாடியும் அசத்திய ருக்மணி விஜயகுமாரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.

45 வயதை கடந்த நிலையில், இன்னமும் நீச்சல் உடையில் செம ஃபிட்டாக இருக்கும் ருக்மணி மாலத்தீவில் எடுத்த வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

Bommalattam fame Rukmini Vijayakumar latest Maldives trip photos goes viral
Photo Credit:

நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட அவர் தற்போது விஜே பார்வதி போல சுற்றூலா பயணிகளை வெளிநாடுகளுக்கும் தீவுகளுக்கும் டூர் அழைத்துச் செல்லும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.

பொம்மலாட்டம் ருக்மணி: பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பெங்களூர் பெண் தான் ருக்மணி விஜயகுமார். ஆனந்த தாண்டவம், கோச்சடையான், ஷமிதாப், காற்று வெளியிடை மற்றும் சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கடந்த 3 ஆண்டுகளாக புதிதாக எந்தவொரு படத்திலும் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bommalattam fame Rukmini Vijayakumar latest Maldives trip photos goes viral
Photo Credit:

மாலத்தீவில் எகிறி குதித்து: பாய்ஸ் படத்தில் "எகிறி குதித்தேன் வானம் இடித்தது" பாடலில் சித்தார்த், ஜெனிலியா எல்லாம் எகிறி குதித்து அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிற்பது போன்ற நடன அசைவுகள் இருக்கும். அதே போல மாலத்தீவில் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு எகிறி குதித்து எடுத்த போட்டோக்களையும், சொகுசு போட்டில் சுற்றுலா சென்ற வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

விஜே பார்வதி போல பிசினஸ்: ரசிகர்களையும் சுற்றுலா பயணிகளையும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியை விஜே பார்வதி செய்து வருவது போல இவரும் மாலத்தீவில் உள்ள பட்ஜெட் ஃபிரெண்ட்லி தீவான திகுரா தீவுக்கு வரும் நவம்பர் மாதம் 7 நாள் ட்ரிப் அழைத்துச் செல்லப் போவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். யோகா உள்ளிட்ட விஷயங்களும், நீச்சலே தெரியாதவர்களுக்கும் பேசிக் ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட சாகச நிகழ்வுகளை சுற்றுலாவில் செய்து தருவோம் எனக் கூறியுள்ளார். முதல் படத்திலேயே ஆணாகவும் பெண்ணாகவும் நடித்து அசத்திய திறமையான நடிகைக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X